---Advertisement---

சரத்குமாரை பாராட்டி தள்ளிய தயாரிப்பாளர் ராஜன்!…அடடே அவரா?…இது புதுசா இருக்கே!…

Published on: April 19, 2024
rajan sarathkumar
---Advertisement---

மேடைகள், பொது நிகழ்ச்சிகள் என்று  பாராமல், தன் மனதில் பட்ட கருத்துக்களையும், தான் சந்தித்த நிகழ்வுகளையும், அனுபத்தையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்.  தயாரிப்பாளர் ராஜன்.  நேர்மையானவர் என்பதால் இவரிடம் இருந்து பாரட்டு பெறுவது கடினம் என்று கூட சொல்லப்படும்.  இப்படிப்பட்டவர் தனது தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த ஒரு சுவாரசியத்தை சொல்லியிருப்பார்.

வில்லனாக வாழ்க்கையை துவங்கி, புகழ் கொண்ட கதாநாயகர்களில் ஒருவராக வீர நடை போட்டு, தற்பொழுது குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து வருபவர்  சரத்குமார். இவர் நடித்த படங்கள் ஏராளமானவை “வெள்ளிவிழா” கண்டது உண்டு. “சூரியவம்சம்”, “நாட்டாமை” “நட்புக்காக”,”சேரன் பாண்டியன்” என அடுக்கிக் கொண்டே போகலாம்.

sarathkumar
sarathkumar

மறைந்த ‘கேப்டன்’, ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்துடன் “கேப்டன் பிரபாகரன்” படத்தில்  நடித்திருந்தார். இவரது நல்ல மனம் குறித்து தயாரிப்பாளர் ராஜன் கூறியிருந்தார்.
சரத்குமாரை வைத்து “தங்கமான தங்கச்சி” என ஒரு படத்தை  எடுத்திருக்கிறார்.

ராஜன் அந்த படத்தின் சம்பளமாக சரத்குமாருக்கு பேசிய  தொகை  ஒன்றரை லட்ச ரூபாய். குறித்த நாட்கள் தாண்டியும் படப்பிடிப்பு சென்றதாம். தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ‘கமிட்’ ஆகியிருந்ததால் ராஜனின் படம்  தாமதம் ஆனதாம்.

இது குறித்து ராஜன் சரத்குமாரிடம் கேட்ட போது என் சூழ்நிலை தான் உங்களுக்கு தெரியாதா? என சொன்னாராம். அவருக்கு பேசப்பட்ட சம்பள தொகையில் பத்தாயிரம் ரூபாயை ராஜன் பாக்கியாக கொடுக்க வேண்டியதாக இருந்தாம்.

ஆனால் சரத்குமாரோ படப்பிடிப்பு தள்ளிப்போக தான் காரணமானதால்  அந்த பத்தாயிரம் ரூபாய்  வேண்டாம் எனக் கூறிவிட்டாராம். தன்னால் யாரும் சிரமப்படக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர் சரத்குமார்  என ராஜன் மனம் திறந்திருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Samantha Ruth Prabhu from a high-octane action sequence poster of Maa Inti Bangaaram movie celebrating day 1 box office numbers.

“வசூலில் மாஸ் காட்டும் சமந்தாவின் சோலோ அசுர வேட்டை!”.. முதல் நாளே ரூ.10.7 கோடி வசூலித்து ‘மா இண்டி பங்காரம்’ சாதனை.. ராம் சரண் நெகிழ்ச்சி பாராட்டு!

Actress and producer Kushboo Sundar speaking emotionally during the official movie success meet hosted by Avni Cinemax banner.

“பெண்கள் சொந்தக் காலில் நிக்கணும், யாருக்கும் குறைந்தவர் இல்லை!”.. அவனி சினிமாக்ஸ் வெற்றி விழாவில் உடைந்த குஷ்பூ.. மூத்த மகள் கல்யாணம் மற்றும் ‘பொம்மை’ அனி குறித்து நெகிழ்ச்சியான பேச்சு!

Compilation graphic of hot upcoming OTT releases like Save The Tigers Season 3, Athiradi, and The Creator on streaming platforms.

“இந்த வாரம் ஓடிடியில் செம்ம ட்ரீட் இருக்கு!”.. ஜூன் 19 & 20-ல் நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகும் மெகா படங்கள் மற்றும் சீரிஸ்.. முழு ரிலீஸ் லிஸ்ட் இதோ!

Actors Victory Venkatesh, Nandamuri Kalyan Ram, and Director Anil Ravipudi during the official pooja ceremony of VenkyAnil5 NKRAR2 project.

“தியேட்டரில் வெறித்தனமான ஃபன் கேரண்டி!”.. வெங்கடேஷ் – கல்யாண் ராம் கூட்டணியில் அனில் ரவிபுடியின் மெகா மல்டிஸ்டாரர் லோடிங்.. பூஜையுடன் தொடங்கிய பிரம்மாண்டப் பயணம்!

Actor-director Vishal in a powerful posture from the official promotional banner of Magudam movie first single Rise of Linga.

“மாஸ் காட்ட வரும் விஷாலின் ரைஸ் ஆஃப் லிங்கா!”.. இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் ‘மகுடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ஜிவி பிரகாஷின் அதிரடி ட்ரீட்!

Director Shankar son Arjith Shankar along with director H Vinoth and Jason Sanjay during the official movie launch event of Lover Boy.

“டைட்டில் லவ்வர் பாய்.. பக்காவா லாக் செய்த காம்போ!”.. கோலிவுட்டில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித்.. விஜய் மகன் சஞ்சய், இயக்குநர் ஹெச் வினோத் நேரில் வாழ்த்து!