---Advertisement---

அட்லி ஷாருக்கான் இணையும் படத்தில் பிரியாமணியும் இணைகிறார்

Published on: September 5, 2021
---Advertisement---

தமிழில் விஜயை வைத்து பல முன்னணி படங்களை இயக்கியவர் அட்லி. இவர் தற்போது ஷாருக்கானை வைத்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளில் படம் இயக்க இருப்பதாக கூறப்பட்டது.

படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தன. தற்போது இதன் படப்பிடிப்பு புனேவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படப்பிடிப்பில் ஷாரூக்கான், நயன்தாரா, ப்ரியாமணி ஆகியோர் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள்.

பிரியாமணி ஏற்கனவே ஷாருக் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர்.

இந்த படத்தில் பிரியாமணி முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனைத் தயாரித்து வருகிறது. இதில் ஷாரூக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார்.

படத்தில் காமெடிக்காக யோகிபாபு நடிக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.