---Advertisement---

பிரசாந்த் நடிக்கும் அந்தாதூன் பட ரீமேக் தமிழில் இன்று துவக்கம்

Published on: March 10, 2021
---Advertisement---

ஹிந்தியில் வந்து மிகப்பெரிய ஹிட் அடித்த படம் அந்தாதுன். இந்த படம் கடந்த 2018ல் வெளியானது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரும் வசூலை வாரிக்குவித்தது.

இந்த படத்தின் தமிழ் உரிமையை வாங்கிய நடிகர் தியாகராஜன் அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்தை நடிக்க வைத்து அந்த படத்தை இயக்க மோகன்ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

திடீரென மோகன்ராஜா படத்திலிருந்து விலகி கொண்ட நிலையில் தயாரிப்பாளர் தியாகராஜன் இப்போது இயக்குனராக ஜே ஜே பிரட்ரிக்கை நியமித்துள்ளார். இவர் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கியவர்.இன்று பொன்மகள் வந்தாள் படத்தின் பூஜை தொடங்கியது.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.