---Advertisement---

மீண்டும் தியேட்டர்களில் ஒத்த செருப்பு

Published on: November 10, 2020
---Advertisement---

இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் நடிப்பில் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வந்த திரைப்படம் ஒத்த செருப்பு. இதில் வித்தியாசமான முயற்சியாக ஒருவர் மட்டுமே இப்படத்தில் நடித்திருந்தார் .இது போல எடுக்கப்படும் படங்கள் நன்றாகவே இருந்தாலும் அந்த நேரத்தில் வந்திருக்க கூடிய வேறு ஏதாவது படங்கள் மசாலத்தனமாக இருந்தால் அது போல படங்களை ரசித்துவிட்டு இது போல படங்களை கோட்டைவிட்டுவிடுவார்கள் ரசிகர்கள்.

பார்த்திபனின் ஒத்த செருப்பு நன்றாக இருந்தாலும் ஏதோ சில காரணங்களால் தியேட்டரை விட்டு வந்து விட்டது. சரியான தியேட்டர் கிடைக்காத நிலையும் இருந்தது. இந்நிலையில் தற்போது தீபாவளிக்கு புதிய படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில் இது போல படங்களை  மீண்டும் வெளியிட பார்த்திபன் திட்டமிட்டுள்ளார்.

தீபாவளிக்கு மீண்டும் ‘ஒத்த செருப்பு’ திரையரங்குகளில்-வந்த போது பார்க்கத் தவறிவிட்டோம் என வருத்தப் பட்ட நண்பர்களுக்காகவும்,வெளியானபோது இன்னும் வரவேற்பு தந்திருக்கலாமே என ஆதங்கப்பட்ட எனக்கும்-என்னை ஊக்கப்படுத்தினால் இன்னும் புதுமை படைப்பை தர முயல்வேன் என பார்த்திபன் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.