---Advertisement---

ஓ மை காட் இவங்களுக்கு இந்த திறமை இருக்குதா!..கால்குலேஷன் மிஸ் ஆகி போச்சோ?…

Published on: May 20, 2024
srinath sj surya
---Advertisement---

நாம் திரையில் நடிகர்களாக மற்றும் பார்த்து வருபவர்களுக்கு மிகப்பெரிய இன்னொரு முகமும் இருக்கிறது என்பதை கேட்பதற்கு ஆச்சரியமாக கூட இருக்கலாம். “மாயாண்டி குடும்பத்தார்” படத்தில் நடித்த தருண் கோபி விஷால் நடித்து வெற்றியடைந்த “திமிரு”, சிம்பு நடித்த “காளை” படங்களையும் இயக்கியவர்  என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம், தெரியாமல் கூட இருந்திருக்கலாம்.

அதேபோல “வேட்டைக்காரன்” படத்தில் விஜய்க்கு நண்பராக வந்திருப்பார் ஸ்ரீநாத். இவர் “நாளைய தீர்ப்பு” படத்திலும்  விஜய்க்கு நண்பராக நடித்திருப்பார்.  இவர் இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார் “முத்திரை”, சந்தானம் நடித்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” இவை இரண்டும் ஸ்ரீநாத்தின் படங்களே.

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக மட்டுமே பார்க்கப்படுபவர் ரமேஷ் கண்ணா. அவரும் ஒரு இயக்குனர் என்பது பலருக்கும் தெரியாமலே கூட இருந்திருக்கலாம். அஜீத், ஹீரா, தேவயானி நடிப்பில் வெளியான “தொடரும்” படத்தை இயக்கியது இவர். அதோடு மட்டுமல்லாமல் “அவ்வை சன்முகி” படத்தில் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து இருக்கிறார். சில படங்களுக்கு திரைக்கதையும், வசனமும் எழுதியுள்ளார்.

pichaikkaaran
pichaikkaaran

விஜய் ஆண்டனி நடித்த “பிச்சைக்காரன்” படத்தில் கருப்பு பணம் குறித்த வசனத்தை பேசியிருந்தவர் கோவிந்த மூர்த்தி. இவர் “கருப்பசாமி குத்தகைக்காரர்”, “வெடிகுண்டு முருகேசன்”, “பப்பாளி” படங்களை இயக்கியிருக்கிறார். “அங்காடி தெரு” படத்தில் நடித்திருந்த வெங்கடேஷ் விஜய் நடித்த “பகவதி” படத்தோடு சரத்குமாரின் “ஏய்”, “மாஞ்சா வேலு” உள்பட பல படங்களை இயக்கியிருக்கிறார்.

இன்றைய 2கே கிட்ஸ் வில்லனாக மட்டுமே பார்த்து வரும் எஸ்.ஜே.சூர்யா அஜீத், விஜய் என இருவரையும் வைத்து தனித்தனியே இயக்கிய “வாலி”, “குஷி”படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official promotional teaser graphic for Ajith Kumar's motorsports documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டீசர் வெளியீடு: மோட்டார்ஸ்போர்ட் உலகை அதிரவைக்கும் ‘Gladiators: In Pursuit of Challenges’ அதிகாரப்பூர்வ டீசர்!

Official action-packed promotional trailer poster for Sundeep Kishan's Sigma directed by Jason Sanjay.

ஜெசன் சஞ்சய் இயக்கத்தில் சுந்தீப் கிஷனின் ‘சிக்மா’ ட்ரெய்லர்: மிரட்டலான கொள்ளை மற்றும் அதிரடி ஆக்‌ஷனுடன் வெளியானது மசாலா விருந்து!

Official 'First Move' promotional poster for Dhruv Vikram's action film Jackie.

துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் மூவ் அப்டேட்: சந்தோஷ் நாராயணன் இசையில் விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு!

Official trailer promotional graphic for Keerthy Suresh and Karthick Subbaraj's Dorothy.

கார்த்திக் சுப்புராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’ ட்ரெய்லர்: கிராமத்து பின்னணியில் மிரட்ட வரும் இசைஞானி இளையராஜா காவியம்!

Official promotional poster for the Marathi film gondhal, India's official entry to the 2027 Oscars.

2027 ஆஸ்கார் களத்தில் மராத்தி படம்: இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கொண்டால்’!

Official announcement poster for Bhavana Studios' upcoming multilingual comedy-drama Picnic.

பிரேமலு தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மெகா படம்: குடும்பத்துடன் கொண்டாட வரும் ‘பிகினிக்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!