---Advertisement---

பங்க பிரிங்க…பறந்து வந்து விழுந்த நோட்டீஸ்!…இந்தியன்-2 ரிலீசுக்கு புதிய சிக்கல்?…

Published on: June 17, 2024
Indian-2
---Advertisement---

இரட்டை வேடங்களில் கமல் நடித்து ஷங்கர் இயக்கிய படம் “இந்தியன்”. இதன் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. முதல் பாகத்தில் தகப்பன் – மகன் என இரண்டு விதமான மாறுபட்ட நடிப்பில் அசத்திருயிருந்தார் கமல்.

சேனாபதி கமல் நாட்டின் நலனுக்காக ஊழல்வாதிகளை தேடிச்சென்று கொல்லும் கேரக்டரில் நடித்திருந்தார். இவரது கெட்டப்பிற்கு மேக்-அப் எவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக அமைந்ததோ, அதே போல தான் வர்ம கலையால் கொலை செய்யும் காட்சிகளும் அமைந்தது.

ரஜேந்திரன் என்கின்ற வர்மக்கலை ஆசான் எழுதிய புத்தகத்தின் மீது வந்த ஈர்ப்பினால் தான் படத்தில் வர்ம கலை சேர்க்கப்பட்டது. அதுவே படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணமாக மாறியது.

ஆசான் ராஜேந்திரன் முதல் பாக ஷூட்டிங்கில் கலந்து கொண்டு கமலுக்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். இதே வர்ம கலையை தான் “இந்தியன் – 2” பாகத்திலும் பயன்படுத்தியுள்ளாராம் படத்தின் இயக்குனர் ஷங்கர்.

kamal shankar
kamal shankar

சொல்லப்போனால் முதல் பாகத்தை விட இதில் தான் வர்ம கலையின் தாக்கம் அதிகமாக இருக்குமாம். முதல் பாகத்தில் தனக்கு கொடுக்க வேண்டிய சரியான மரியாதையை கொடுத்த படக்குழு, இரண்டாம் பாகத்தில் கொடுக்க வில்லையாம்.

இதனால் ராஜேந்திரன் “இந்தியன்-2” பட இயக்குனர், தயாரிப்பளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்.  குறிப்பிட்ட ஒரு முத்திரையை  பயன்படுத்தியிருக்கிறாராம் படத்தில் கமல்.

அந்த முத்திரை முழுவதுமாக தனது கண்டுபிடிப்பு அதனால் அதனை பயன்படுத்த தன்னிடம் கேட்டிருக்க வேண்டும் என சொல்லியிருக்கிறாராம் வர்ம கலை ஆசான் ராஜேந்திரன்.

ஒருவேளை இந்த விஷயத்தில் சுமூக தீர்வு ஏற்படாவிட்டால் படம் ரிலீஸ் ஆவது தள்ளிப்போய்விடுமோ? என்ற கவலை தாத்தா ரசிகர்களை தொற்றியுள்ளது இப்போது. ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பியது குறித்த தகவல்களை பிரபல திரை விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொல்லியிருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!