விஜய் சேதுபதி நடிக்க வந்த நேரத்தில் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்கள் அவருக்கு பெரிய புகழை தேடித்தந்தது.
இதனால் நிறைய படங்களில் தொடர்ந்து நடித்தார். அவரின் புகழ் கூடியது மளமளவென படங்களில் நடிக்க ஆரம்பித்த விஜய் சேதுபதி ஆரஞ்ச் மிட்டாய் என்ற படத்தை தயாரித்தார்.
வித்தியாசமான கதையம்சமுள்ள படம் இது என்றாலும் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
விஜய் சேதுபதியின் முதியவர் வேடம் ரசிகர்களுக்கு புதியதாக இருந்தது. இந்த படத்தை பிஜு விஸ்வநாத் இயக்கி இருந்தார். இந்த படம் வெளிவந்து இன்றுடன் 6 ஆண்டுகளாகிறது.







