---Advertisement---

ஹிட் – ப்ளாப் படம் எந்த லிஸ்டில்?… ஹிட் லிஸ்ட் பட விமர்சனம்…

Published on: May 31, 2024
hit list sarathkumar
---Advertisement---

விஜய், முரளி, அர்ஜுன் போன்ற நடிகர்களுக்கு மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் விக்ரமன். சரத்குமாருக்கு என்றும் பெயரை சொல்லும் “சூரியவம்சம்” என்ற மெகா ஹிட் திரைப்படத்தை இயக்கிய வரும் இவரே.

விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹிட்-லிஸ்ட் படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகி இருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் படத்தை தயாரித்திருக்க, அவரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த சூர்ய கதிர் காக்கிலார், கார்த்திகேயன் இயக்கி உள்ளார்கள். சத்யா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஐ.டி கம்பெனியில் பணிபுரியும் சாதுவான பையன் விஜய். முகமூடி அணிந்த மர்ம நபர் விஜயின் தாய் மற்றும் சகோதரியை கடத்திச் செல்கிறார். தான் சொல்லும் வேலைகளை செய்யாவிட்டால் அவர்களை கொன்று விடுவதாக மிரட்டுகிறார். கொலை வரை செய்ய தூண்டப்படுகிறார் ஹீரோ.

hit list
hit list

இப்படி முகமூடிக்குள் தனது கோர முகத்தை மறைந்திருக்கும் வில்லன் யார். இதிலிருந்து விஜய் எப்படி மீள்கிறார் என்பதை தான் காட்டியிருக்கிறார்கள் இயக்குனர்கள்.

மிரட்டலுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் அடிபணிந்த விஜய் முகமூடி வில்லனிடம் சரண்டர் ஆகிறாரா?  அல்லது தனது வீர செயல்களால் தாய்,தங்கையை காப்பாற்றி மீண்டும் தனது இயல்பு வாழ்க்கைக்கு மாறுகிறாரா?  என்பதை சொல்வது தான் படம்.

சரத்குமார்,கௌதம் வாசுதேவ் மேனன், முனீஸ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி,  ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா என பலரும் இந்த படத்தில் விஜய் கனிஷ்காவுடன் இணைந்துள்ளனர்.

சஸ்பென்ஸ் திரில்லராக வந்துள்ளது இந்த படம். முதல் பாதையினுடைய விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இருந்திருந்தால் படத்தின் ரசிப்பு தன்மை இன்னும் உயர்ந்திருக்கும். பின்னணி இசை ஆறுதல் தருகிறது. பாடல்கள் பெரிதாக கவரவில்லை.

ஆங்காங்கே லாஜிக் குறைபாடுகள் தென்பட்டாலும், இரண்டாவது பாதியின் வேகம் சற்று குறைவாகவே இருந்தாலும் சரத்குமாரின் உதவியால் நல்ல துவக்கத்தை பெற்றுள்ளார் விஜய் கனிஷ்கா.

ஹிட் லிஸ்ட் – இன் குட் லிஸ்ட் தமிழ் சினிமாவில்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Screenshot of Director Mari Selvaraj's official tweet praising Dhanush's performance in Kara (கர).

Mari Selvaraj Review: “திரை சிலிர்ப்பு.. நெஞ்சுக்குள் உசுப்பிய தனுஷ்!” கர படத்தைப் பார்த்து மாரி செல்வராஜ் போட்ட உருக்கமான ட்வீட்.. ஜித்து முண்டா யார்?

Official award poster of actress Honey Rose winning the 2nd Best Actress at the 49th Kerala Film Critics Award 2025 for Rachel.

49th Kerala Film Critics: “ரேச்சல் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!” முதல் விருதை வென்று நெகிழ்ந்த ஹனி ரோஸ்.. வைரலாகும் போஸ்டர்!

Actress Raiza Wilson sharing the announcement of her upcoming movie NOVA's trailer release on April 30, 2026.

Raiza’s NOVA Trailer: “நாளை ஒரு சர்ப்ரைஸ்!” ரைசா வில்சனின் ‘நோவா’ பட டிரெய்லர் ரிலீஸ்.. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!

Official announcement poster of director Singeetham Srinivasa Rao's #SSR61 produced by Nag Ashwin.

SSR61 Update: “யாரும் பார்த்திராத ஒரு கதை!” 40 ஆண்டு கனவு.. சிங்கீதம் சீனிவாச ராவ் – நாக் அஸ்வின் கூட்டணியின் பிரம்மாண்ட அறிவிப்பு!

A collection of candid and charismatic high-definition photos of actor Sivakarthikeyan from recent public events and film promotions.

SK-RKFI Update: “65 கோடி சம்பளம்.. 55 கோடிக்கு ஓடிடி டீல்!” சிவகார்த்திகேயனின் சேயோன்.. கறார் காட்டும் நெட்பிளிக்ஸ்! பின்னணி என்ன?

Actor Yash's official look from Toxic movie with the announcement of the release date postponement.

Toxic Postponed: “ஜூன் 4-ல் டாக்ஸிக் வராது!” ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராக்ஸ்டார் யாஷ்.. ரிலீஸ் தேதி தள்ளிப்போனது ஏன்?