---Advertisement---

பதுங்கி இருந்த குட்டி புலி பாய்ஞ்சு பதினோறு வருஷம் முடிஞ்சி போச்சே!…பாசத்துகாக பழிவாங்குன புலி இது….

Published on: May 30, 2024
---Advertisement---

முத்தையா இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் வெளிவந்த படம் “குட்டிப்புலி”. இயக்குனராக களம் கண்டு அவர் இயக்கிய படத்தில் அவரே நாயகன் என மாஸ் ஆக அறிமுகம் கண்டவர் சசிக்குமார். “சுப்ரமணியபுரம்”, “நாடோடிகள்” என அடுத்தடுத்து வெற்றிப்படங்கள்.

இந்த வரிசையில் முத்தையாவின் தாய்-மகன் பாசத்தை மையமாக கொண்ட கதையில் நடித்திருந்தார் சசிக்குமார். சரண்யா பொன்வண்ணன், சசிக்குமாருக்கு அம்மாவாக நடித்திருந்தார். தாய்க்காக எதையும் செய்யும் மகன், மகனின் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் கையில் கத்தி எடுக்கும் பாசமிகுந்த தாய்.

படம் பார்க்கவந்தவர்களை சென்டிமென்ட் காட்சிகளால் உருக வைத்திருந்தார் இயக்குனர். சசிக்குமாருக்கு ஜோடியாக லட்சுமி மேனன். இருவரின் காதல் காட்சிகள் படத்தை மேலும் ரசிக்க வைத்திருந்து.

sasikumar laxmi menon
sasikumar Laxmi menon

அதிரடி ஹீரோவான சசிக்குமாரை தனது அன்பால் அரவனைக்கும் காதலியாக லட்சுமி மேனன். இறுதியில் இருவருக்கும் திருமணம். இப்படி ரோமேன்ஸ்,ம் சென்டிமென்ட், காமடி கலவையாக படத்தினை கொடுத்திருந்தார் சசிக்குமார்.

சசிக்குமாரை கொலை செய்தே தீரவேண்டும் என்ற வெறியோடு காத்திருக்கும் வில்லனிடம் தனது மகனுக்காக  கெஞ்சும் சரண்யா நடிப்பில் அசத்தியிருந்தார்.

மகன் மீது தனது பாசத்தை விவரிக்கும் காட்சிகளில் படம் பார்க்கவந்தவர்களின் கண்களை குளமாக்கியிருப்பார் தனது உருக்கமான நடிப்பால்.

ஒரு பக்கம் படம்  இப்படி சென்று கொண்டிருக்க, சசிக்குமாரின் நண்பர்கள் அடிக்குக் லூட்டியால் கண்ணீர் வந்த கண்களின் முகத்தில் சிரிப்பும் சேர்ந்து வந்தது.

கடந்த 2013ம் வருடம் இதே மே மாதம், 30ம்தேதியில் வெள்ளித்திரைக்கு வந்தடைந்தது, “கருடன்” படத்தில் தற்போது சூரியுடன் முக்கிய வேடத்தில் நடித்து வரும் சசிக்குமாரின் பெயரை சொல்லும் படமாக அமைந்திருந்தது இந்த “குட்டிப்புலி” படம்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

Official theatrical release poster for Vishnu Vishal and Mamitha Baiju's movie Irandu Vaanam.

விஷ்ணு விஷால் – மமிதா பைஜு ஜோடியின் ‘இரண்டு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 23-ல் உலகமெங்கும் வெளியீடு!

News visual highlighting the casting fraud complaint and police investigation regarding the movie Dharman.

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் மோசடி: கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார்!

Visual representation of David Warner's viral AI dance video for the Jailer 2 song 'Ala Polelo'.

ஜெயிலர் 2 ‘அலா பொலேலோ’ பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர்: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ!

Visual representation of director Ashwath Marimuthu revealing casting trivia for the movie Dragon.

‘டிராகன்’ பட வாய்ப்பை நழுவவிட்ட பிரீத்தி முகுந்தன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!