விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘நெற்றிக்கண். அவள் படத்தை இயக்கிய இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கிரிஷ் இசையமைத்து உள்ளார்.
இப்படம் ஆகஸ்ட் 13ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என ட்ரைலர் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் பிளைன்ட் என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். கடந்த ஆண்டு இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நெற்றிக்கண் படத்தின் முதல் பாடலான ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.








