---Advertisement---

தர்பார் படத்தில் நயன் வாங்கிய சம்பளம் – வாயை பிளக்கும் சக நடிகைகள்

By Sri
Published on: May 22, 2019
தர்பார் படத்தில் நயன் வாங்கிய சம்பளம் - வாயை பிளக்கும் சக நடிகைகள்
---Advertisement---

தர்பார் படத்திற்காக நயன் தாராவுக்கு அளிக்கப்படும் சம்பளம் தமிழ் சினிமா உலகின் மற்ற நடிகைகளை வாயை பிளக்க வைத்துள்ளது.

பேட்டை வெற்றி படத்தை அடுத்து ரஜினி தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்த படத்தை லைக்கா புரடக்‌ஷன்ஸ் தயாரித்துவருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கும் எனத் தெரிகிறது. இப்படத்தை பிரபல லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்காக ரஜினிக்கு ரூ.100 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இடத்தில் தற்போதும் ரஜினி முதலிடத்தில் நீடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ.6 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். நயன்தாரா நடித்தால் படம் ஹிட் என்பதால் அவருக்கு இந்த சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மற்ற தமிழ் பட நடிகைகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.