எஸ்.ஏ சந்திர சேகரின் நான் கடவுள் இல்லை

எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 1985ம் ஆண்டு வெளியான திரைப்படம் நான் சிகப்பு மனிதன். ரஜினி நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்த படத்தை போலவே தற்போது ஒரு படத்தை இயக்க இருக்கிறார் இவர்.

அந்த படத்தின் தலைப்பு போலவே இதற்கும் தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் கடவுள் இல்லை என்ற இந்த படத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.

படத்தின் தலைப்பு பாலா இயக்கத்தில் வந்த நான் கடவுள் படத்தையும் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வந்த நான் சிகப்பு மனிதன் மற்றும் ரஜினி, கார்த்தி போன்றோர் நடித்த நான் மகான் அல்ல போன்ற புகழ்பெற்ற படங்களின் தலைப்பை ஒட்டி வருவதால் சீக்கிரம் தலைப்பு மக்கள் மனதில் சென்று சேர்ந்து விடும் என்பதில் ஐயமில்லை.

அதிரடி த்ரில்லராக இப்படம் உருவாகிறது.