ஸ்ரீபதி இயக்கத்தில் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க 800 என்ற படம் தயாராக இருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன் தினம் வெளியான நிலையில் நாம் தமிழர் கட்சி உட்பட பல தமிழ் தேசிய அமைப்பினர் இப்படத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இலங்கை போரின்போது பல தமிழர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டபோது அதை எதிர்க்காமல் ஆளும் சிங்கள அரசுக்கு ஆதரவளித்தவர் முத்தையா முரளிதரன் என்பது அவர் மீதுள்ள குற்றச்சாட்டு. இதனால் 800 படத்தில் தமிழரான விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்பது பலரின் நிலைப்பாடாக உள்ளது. நாம் தமிழர் கட்சியில் முன்னணி நிர்வாகியாக இருந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் இப்படத்தை கடுமையான முறையில் எதிர்த்துள்ளார்.
அதே நேரத்தில் இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தை கடுமையாக எதிர்த்துள்ளார். விஜய் சேதுபதி 800 திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.









