---Advertisement---

இணையத்தில் வைரலாகும் மிஸ்டர் லோக்கல் பாடல் வீடியோ…

By Sri
Published on: May 22, 2019
இணையத்தில் வைரலாகும் மிஸ்டர் லோக்கல் பாடல் வீடியோ
---Advertisement---

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி சமீபத்தில் திரைக்கு வந்த மிஸ்டர் லோக்கல் படத்தின் ஒரு பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, யோகிபாபு, சதீஷ், ரோபோ சங்கர், ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை ரசிகர்களை கவரவில்லை என்பதால் இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், இப்படத்தில் முதல் பாடலாக அமைந்துள்ள மிஸ்டர் லோக்கல் என்கிற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இந்த பாடல் வீடியோவை இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.