---Advertisement---

அய்யய்யோ பேங்க் வேலையும் போச்சு…விளக்கம் கொடுத்த மோகன்…கம்-பேக்கை கெடுத்து விட்டதா ஹரா?..

Published on: June 10, 2024
mohan
---Advertisement---

 

“ஹரா” படம் பெரிய அளவில் பெரை வாங்கித்தரும் என் எதிர்பார்த்திருப்பார் மைக் மோகன். ஆனால் படத்தை பார்த்த ரசிகர்களின் கருத்துக்களோ எப்படி உள்ளது என்றால் “கோட்” படம் வெளியான் பிறகு கூட இந்த “ஹரா”வை வெளியிட்டிருக்கலாம் என்பதாகக்கூட இருக்கும். காரணம் படத்தின் எதிர்பார்த்தது போல எதுவுமே இல்லை என்பதால்.

ஆனால் ஒரே ஒரு ஆறுதல் தரும் விஷயமாக அமைந்ததாக சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும் “ஹரா”வை பொறுத்தவரை. ராமராஜன் கம்-பேக் கொடுத்திருந்த “சாமனியன்” படத்தின் முதல் நாள் வசூலை விட “ஹரா” அதிகாமாக வசூலை கொடுத்தது என்பது மட்டுமே.

haraa
haraa

தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ஈடுபாடில்லாமல் தான் மோகன் முதலில் நடிக்க வந்திருப்பார் போல அல்லது அவரின் வெற்றி இந்த அளவில் இருக்கும் என்பதை அவரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார் போலவே தெரிகிறது. காரணம் சமீபத்தில் அவரது பழைய நினைவுகளை பற்றி அவர் சொல்லியுள்ளது.

“கோகிலா” படத்தில் அவர் நடிக்க வரும் முன்னர் “சின்டிகேட் வங்கியில் இவருக்கு வேலை கிடைத்திருந்திருக்கிறது. படத்தை முடித்துவிட்டு பணியில் தொடர்கிறேன் என மோகன் வங்கி மேலாளரிடம் கோரியிருக்கிறார். மேலாளரும் அதற்கு சம்மதம் தெரிவித்திருகிறார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  படையப்பா போஸ்டரை ஒட்டீட்டு பாளையாத்தம்மனை காட்டிடீங்களே சுந்தர் சி!...என்னது தமன்னா தங்கச்சியா?...

 

‘லாஸ் ஆப் பே’ முறையிலே மோகனது வேலை கணக்கிடப்பட்டிருக்கிறதாம். ஆனால் அடுத்ததடுத்து திரைப்படங்கள் என சினிமாவில் பயங்கர பிஸியானதால் மோகனால் வங்கி வேலையை தொடரவே முடியவில்லையாம்.

 

“கோகிலா”விற்கு பிறகு “பயணங்கள் முடிவதில்லை”, “கிளிஞ்சல்கள்” என இவர் நடித்த படங்கள் எல்லாம் பெரிய வெற்றிகளை பெற்றுத்தந்தது. மோகனே நினைத்தாலும்  அவரால் சினிமாவை தவிர்த்திருக்க முடியாது அப்படி ஒரு மாஸ் இருந்தது அவருக்கு.

ஆனால் இப்போது வெளியாகியுள்ள “ஹரா”வால் மோகனுக்கு முன்னேற்றம் கிடைக்காமல் போனலும், “கோட்” படம் அவருக்கு நல்லதொரு பெயரை பெற்று “ஹரா”வில் கிடைக்காத திருப்பத்தை “கோட்” தரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் மோகனின் ரசிகர்கள்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the updated release window for Rajinikanth's Dharman.

பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா ரஜினியின் ‘தர்மன்’: புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

Editorial visual announcing Jason Sanjay's acting debut in Atlee's production.

ஹீரோவாக களமிறங்கும் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்: அட்லீ தயாரிப்பில் உருவாகும் புதிய படம்!

Editorial visual announcing the grand pooja launch of Ajith Kumar's Daredevil.

ஷாலினி அஜீத் Clapboard தட்ட அஃபிஷியலாக தொடங்கியது அஜித்தின் ‘டேர்டெவில்’: பூஜை விழாவில் திரண்ட முன்னணி இயக்குநர்கள்!

Editorial visual announcing the "World of Arasan" Diwali promo release for Silambarasan TR and Vetrimaaran's film.

தீபாவளிக்கு ‘வேர்ல்ட் ஆஃப் அரசன்’: வெற்றிமாறன் – சிம்பு படத்தில் சந்தீப் ரெட்டி வங்கா நடிப்பு!

Editorial visual depicting project developments between Suriya, H. Vinoth, and Karthi's Theeran 2.

சூர்யாவுடன் விலகிய கூட்டணி: கார்த்திக்காக ‘தீரன் 2’ கதையை கையில் எடுக்கும் எச். வினோத்!

Editorial graphic illustrating the reported multi-starrer project with Suriya, Dhanush, and Mani Ratnam.

சூர்யா – தனுஷ் காம்போவில் பிரம்மாண்ட படம்: மணிரத்னம் இயக்கும் புதிய டுயல்-ஹீரோ மல்டிஸ்டாரர்!