---Advertisement---

கமலுடன் ஈனா மீனா டீகா பாடிய மீனா?…. இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!…

Published on: June 17, 2024
kamal baby meena
---Advertisement---

“களத்தூர் கண்ணம்மா” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். அதன் பிறகே அவர் கதாநாயகன், வில்லன் என பல கெட்டப்புகளில் நடித்திருந்தார். மீனாவும் இவரை போலவே தான் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமானார்.

ரஜினியை செல்லமாக ரஜினி அங்கிள் என அழைத்ததையே முதல் முதலாக கேட்டனர் தமிழ் சினிமா ரசிகர்கள் “அன்புள்ள ரஜினிகாந்த்” படத்தில்.

அதன் பின்னர் ரஜினியுடன் “எஜமான்” படத்தில் ஹீரோயின் ஆனார் மீனா. இதனால் தான் மீனாவுக்கென தனி இடம் கோலிவுட்டில் கிடைத்தது.

ரஜினியுடன் தொடர்ந்து “வீரா”, “முத்து” படங்களில் நடித்தார்.

kamal meena
kamal meena

கமலுடன் நடித்துள்ளார் மீனா. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த “அவ்வை ஷண்முகி” படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. “தெனாலி” படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் கமலுக்கு மனைவியாக நடித்திருப்பார்.

ஜெயராமை குணப்படுத்த கமலும், மீனாவும் சேர்ந்து நாடகமாடியிருப்பர். வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீதும் இந்த காட்சியில் நடித்திருந்தார்.

“அன்புள்ள ரஜினிகாந்த்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது போல, உலக நாயகன் கமல்ஹாசனுடம் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் மீனா. 1984ம் ஆண்டு வெளியான “யாத்கார்” படத்தில் தான் மீனா தனது சிறு வயதில் நடித்தார்.

மீனாவின் மகள் விஜயுடன் “தெறி” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ‘ஈனா, மீனா, டீகா’ பாடியிருந்தார். இதே மாதிரி மீனாவும் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினி, கமலுடன்  நடித்து ‘ஈனா, மீனா, டீகா’ பாடியிருந்தார்.

எப்படி ரஜினி, கமல் இருவருடனும் குழந்தை நட்சத்திரமாக நடித்தாரோ அதே போல இருவருடனும் ஹீரோயினாகவும் நடித்தும்  விட்டார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Shiva announcing the upcoming schedule for the comedy film Tamizh Padam 3.

“தமிழ் படம் 3′ அப்டேட்: அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவா!

மருத்துவமனையில் இருந்து திரும்பிய மூத்த நடிகை டிஸ்கோ சாந்தியின் சமூக வலைதளப் பதிவு.

Disco Shanthi Hospitalised: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய மூத்த நடிகை!

Official promotional poster for the sports docu-drama Gladiator featuring Ajith Kumar and Thalapathy Vijay.

அஜித் – விஜய் இணையும் ‘கிளாடியேட்டர்’ ஆவணப்படம்: நவம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Official audio and trailer launch announcement poster for Sundeep Kishan's Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: சென்னையில் பிரம்மாண்டமாக வெளியாகும் இசை மற்றும் டிரெய்லர்!

Theatrical release banner for Vemal and Shriya Saran's long-delayed film Sandakari.

“சண்டக்காரி’ ரிலீஸ் அப்டேட்: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரைக்கு வரும் விமல் – ஸ்ரேயா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Promotional banner highlighting the record-breaking streaming numbers of the film Youth.

‘யூத்’ படத்தின் சாதனை இசை: ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் மெகா சாதனை!