---Advertisement---

வெளியானது வாத்தி கமிங் – கொண்டாட்டமா ? ஏமாற்றமா ?

By Sri
Published on: March 10, 2020
---Advertisement---

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கமிங் என்ற பாடல் சற்று முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்டது.

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்ட வேலைகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 9 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் 15 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.

இந்த திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலிஸ் விழா மார்ச் 15 ஆம் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதற்கு முன்னதாகவே வாத்தி இஸ் கம்மிங் என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிகமாக இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரிகள் கம்மியாக (அதுவும் புரியாத வரிகளாக)  உள்ள பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. பாடலின் விஜய்யின் சில புகைப்படங்கள் மட்டுமே காட்டப்பட்ட நிலையில் அனிருத் இடம்பெறும் காட்சிகளும் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகளுமே அதிகமாக உள்ளன.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.