---Advertisement---

சிறந்த திரைக்கதை என்றால் மணிவண்ணன் தான்

Published on: March 23, 2021
---Advertisement---

சத்யராஜ் கவுண்டமணியுடன் பல படங்களில் இவர் அடித்த லூட்டியை இப்போது நினைத்தால் சிரிப்பை விட அழுகைதான் அதிகம் வருகிறது . என் சொந்த ஊர் பொட்டிய உடைக்கட்டும் நீங்க எகுற்ரிங்களா இல்லையானு பார்ப்போம் என சொல்லும் தியாகுவிடம் அட ஒங்க ஊர்லதாண்டா கள்ள ஓட்டே குத்துனோம் என்று மிகவும் கேசுவலாக டயலாக் பேசுவார் ஊட்டிக்கு தனியாத்தான் போகணும் போலருக்கே என்று புலம்புவதாகட்டும் நடிப்பில் பின்னுவார். கோவை மாவட்டம் சூலுரை சேர்ந்தவர் மணிவண்ணன் அவர்கள் கோபுரங்கள் சாய்வதில்லை படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி 50 வது படத்துடன் அவர் வாழ்க்கை முடிந்தது வருத்தமான விஷயம். இயக்குனராக இருந்த காலத்தில் அவ்வப்பொழுது சில படங்களில் தலையை காண்பிப்பார்.ஆனால் 95களுக்கு பிறகு இவர் முழு நேர நடிகராக மாறினார் அந்த நேரம் வந்த பெரும்பாலான படங்கள் இவர் இல்லாமல் வந்தது இல்லை. நூறாவது நாள் போல இன்னொரு படத்தை நினைத்து பார்க்க முடியுமா? எந்த கொம்பனாலும் இப்படியொரு படம் கொடுக்க முடியுமா? இவர் இயக்கிய ஜல்லிக்கட்டு படத்தை பல முறை பார்க்கலாம் அருமையான திரைக்கதையுள்ள விறு விறு படம். சிறந்த முறையில் திரைக்கதை அமைப்பதில் மணிவண்ணனுக்கு நிகர் மணிவண்ணன் தான்.

சின்னத்தம்பி பெரியதம்பி ரசனையான காதல் படம் பாலைவன ரோஜாக்கள் படத்தில் கலைஞர் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர் மணிவண்ணன். சத்யராஜை வைத்து நூறாவது நாள்,24 மணி நேரம்,பாலைவன ரோஜாக்கள்,வாழ்க்கை சக்கரம் படங்களையும் பிரபுவுக்காக சின்னத்தம்பி பெரியதம்பி,பாலைவன ரோஜாக்கள்,விஜயகாந்துக்காக நூறாவது நாள்,உள்ளத்தில் நல்ல உள்ளம் போன்ற படங்களையும் இயக்கியவர்.கார்த்திக்கை வைத்து காதல் ஓய்வதில்லை படத்தை இயக்கினார்.

சுயமரியாதைக்காரராக இருந்தாலும் இவரின் இளமைக்காலங்கள் படத்தில் இடம்பெற்ற ராகவனே ரமணா ரகுனாதா அருமையான பக்திப்பாடல் இப்படியொரு பக்திப்பாடலை எப்படி இவர் இளையராஜாவிடம் இருந்து வாங்கினார் என ஆச்சரியப்படத்தேவையில்லை தான் சார்ந்த கொள்கைகளை அடுத்தவர்களிடம் வலிந்து திணிக்காத நல்ல மனிதர் என்பதற்க்கு இது ஒன்றே போதும்.  2000த்திற்க்கு பிறகு சிவாஜி,ஜெய்சங்கர், நாகேஷ்,ரவிச்சந்திரன்,டி.எம்.எஸ், பி.பி, எஸ்.பி.பி பிபிசீனிவாஸ்,மணிவண்ணன் என எண்ணற்ற சினிமா ஜீனியஸ்கள் மறைந்துவிட்டனர் .

பழைய கலைஞர்களை இழக்க இழக்க மனம் வேதனையடைவது உண்மை .

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Shriya Saran sharing her memorable first meeting with Superstar Rajinikanth during Sivaji.

‘சிவாஜி’ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட பிரபல நடிகை!

Actor Vishal announcing his directorial debut with the film Magudam / Makutam.

35 ஆண்டுக்கால கனவு நனவானது: இயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் விஷாலின் நெகிழ்ச்சியான பதிவுடன் ‘மகுடம்’ உலகளாவிய ரிலீஸ் அப்டேட்!

Poster of Ranbir Kapoor's Ramayana for its theatrical release in China as The Legend of the Prince.

சீனாவில் வெளியாகும் ரன்பீர் கபூரின் ‘ராமாயணம்’: புதிய தலைப்பு மற்றும் சர்வதேச ரிலீஸ் தேதி அறிவிப்பு!

High budget production update graphic for Mookuthi Amman 2.

ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’: ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை தட்டிதூக்கிய முன்னணி நிறுவனம்!

Ilaya Thilagam Prabhu and Sukanya reuniting in MaryGold.

31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் காம்போ: பிரபு – சுகன்யா ஜோடியின் ‘மேரிகோல்ட்’ பட அறிவிப்பு வெளியீடு!

Promotional media image featuring actor Aadhavan and actress Hasini.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையுடன் லிவ்-இன் உறவில் உள்ளேன்: மனம் திறந்த நடிகர் ஆதவன்!