சிம்பு நடிக்க வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மாநாடு படம் தயாராகி வருகிறது. பல பஞ்சாயத்துக்களை சந்தித்த இந்த படம் முதலில் சிம்பு நடிக்க வராமல் இருந்ததால் ஒத்தி வைக்கப்பட்டது.
படம் வெளியாகுமா என பலரும் எதிர்பார்த்த நிலையில் ஒரு வழியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டு சிம்பு மீண்டும் இந்த புராஜெக்டில் நடித்து கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டு லேசாக படப்பிடிப்பு ஆரம்பித்த நிலையில் கொரோனாவால் அனைத்தும் தடைபட்டது.
இப்போது முதல் முறையாக சிம்புவின் ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது.
வரும் 21ம் தேதி சனிக்கிழமையன்று காலை 10.44க்கு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது.







