---Advertisement---

குரலை மாற்றி பாடுவதில் வல்லவரான மலேசியா வாசுதேவன்

Published on: September 6, 2025
---Advertisement---

2010 ல் பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் மறைந்தார். மறைந்தும் நம் மனதில் பாடல்களின் மூலம் வாழ்கிறார். குறிப்பாக ரஜினிகாந்த், உடல் மொழிக்கு இவரின் குரல் தான் பொருந்தி போனது. பல படங்களில் ரஜினி, மலேசியா வாசுதேவன் காம்போதான் பொருந்தி போனது. எல்லா நடிகர்களுக்கும் தன்னுடைய கம்பீர குரலால் பாடி அந்த ஹீரோக்களுக்கு வலு சேர்த்தார் மலேசியா வாசுதேவன் அவர்கள்.

மலேசிய வாசுதேவன் பல வித வித்தைகளை வைத்திருந்தார், அதில் ஒன்றுதான் குரலை மாற்றி பாடுவது, இதுல இவர் வித்தகர் என சொல்லலாம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடித்து கடைசியாக வெளிவராமல் போன மணிப்பூர் மாமியார் படத்தில் சிதம்பரம் ஜெயராமன் குரலில் ஒரு பாடல் பாடியிருப்பார், ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே என்ற அந்த பாடல் மிக சிறப்பானது, பின்னாட்களில் அந்தக்கால பாகவதர் டைப் பாடல்களுக்கு எல்லாம் மலேசியா வாசுதேவனையே பயன்படுத்தினார் இளையராஜா. அடுத்தாத்து ஆல்பர்ட் படத்தில் வரும் சொந்தங்களே பாடலில் அந்தக்கால குரலில் கலக்கி இருப்பார், அது போல கன்னி ராசி படத்தில் வரும் சுகராகமே பாடலிலும் சிதம்பரம் ஜெயராமன் குரலில் கலக்கி இருப்பார் மலேசியா வாசுதேவன்.