---Advertisement---

தனுசுக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்

Published on: November 1, 2020
---Advertisement---

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்திருந்தவர் மாளவிகா மோகனன். இந்த படத்தில் இவரது நடிப்பு ஓரளவு பேசப்பட்டது. இந்த நிலையில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்திற்கும் இவர்தான் கதாநாயகியாவார். மாஸ்டர் படம் இன்னும் வெளியாகவில்லை அநேகமாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என தெரிகிறது.

மாளவிகா மோகனன் நடிகர் தனுசின் ரசிகை அவருடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர வேண்டும் என கூறி இருந்தார். இந்த நிலையில் அவரது ஆசை நிறைவேறும் விதமாக தனுசுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கிறார் மாளவிகா.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் தனுசின் 43வது படமாகும் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்தை துருவங்கள் 16, மாஃபியா படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.