---Advertisement---

மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்

Published on: August 1, 2021
---Advertisement---

கொரோனா பெருந்தொற்று சற்று அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் விடுக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று மீண்டும் லேசாக அதிகரித்து வருகிறது.

தற்போது நிறைய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கொரோனா லேசாக அதிகரித்து வரும் மாவட்டங்களுக்கு மட்டும் விடுக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டாவது அலையில் கோவைதான் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தொற்று அதிகரித்திருப்பதால் கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் நாளை முதல் மீண்டும்  மாலை 5 மணி வரைதான் கடைகள் திறக்க வேண்டும்.

அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.