சந்தானத்துடன் சில படங்களில் இணைந்து நடித்து காமெடி செய்தவர் கிங்ஸ்லி. சூரி ஒரு ஸ்டைல் யோகிபாபு ஒரு ஸ்டைல் என்றால் இவரின் ஸ்டைல் வேற மாதிரி உள்ளது. இவரின் காமெடிகள் வித்தியாசமான ஸ்டைலில் உள்ளதால் சமீப காலமாக வரவேற்பு பெற்று வருகிறார்.
ரஜினி நடித்துள்ள அண்ணாத்தே படத்திலும் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான டாக்டர் படத்திலும் இவரின் காமெடி பெரிதும் பேசப்பட்டது.
இதனால் மற்ற காமெடி நடிகர்களை பின்னுக்கு தள்ளி இவர் விரைவில் முன்னேறி விடுவார் என எதிர்பார்க்கலாம்.







