---Advertisement---

சர்ச்சையை கிளப்பியுள்ள கமலின் விக்ரம் பாடல்

Published on: May 12, 2022
---Advertisement---

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் திரைப்படம் கமலின் விக்ரம் திரைப்படமாகும்.. இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகள் அதிகம் நடைபெற இருக்கிறது.

படத்தின் அனைத்து பாடல்களும் வரும் 15ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான பத்தல பத்தல என்ற பாடல் நேற்று ரிலீஸ் ஆகி இருக்கிறது.

கமலே எழுதி அனிருத் இசையில் பாடியுள்ள இப்பாடல் லேசான சர்ச்சையை உருவாக்க தவறவில்லை. கஜானா காசு இல்லே, ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே என்ற வரிகள்தான் சர்ச்சைக்கு காரணம் ஆகும்.

மறைமுகமாக இல்லாமல் கமல் நேரடியாகவே மத்திய அரசை எதிர்ப்பதாகவே இப்பாடல் வரிகள் உள்ளது. இதனால் இந்த பாடலுக்கு குறிப்பிட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.