---Advertisement---

கமல் நடித்த விக்ரம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Published on: February 26, 2022
---Advertisement---

கமல்ஹாசன் நடித்து வரும் படம் விக்ரம். ஏற்கனவே கடந்த 1985ல் கமல் நடித்த விக்ரம் படம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது அதே பெயரில் மறுபடியும் படம் நடிக்கிறார் கமல்.

மாஸ்டர் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குவதால் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளே நிறைவுற்றதாகவும் முழு படப்பிடிப்பு இன்னும் நிறைவடையவில்லை என கூறப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.