நடிகர் கமலின் எழுத்து பலருக்கு எப்போதும் புரியாத புதிராகவே இருக்கும் அவரது டுவிட்டர் ஸ்டேட்டஸ் பல நேரங்களில் பலருக்கு புரிவதில்லை குழப்புவது போலவே இருப்பதாக சொல்லப்படுவதுண்டு.
கமல் தீபாவளிக்கு வித்தியாசமாக தனது வாழ்த்துக்களை வழக்கம்போல் சொல்லியுள்ளார் அவரின் வாழ்த்து
பெருந்தொற்றுக் காலத்தில் வாழக் கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள் தான். அன்றாடம் வாழ்வைக் கொண்டாடுவோம். அன்பைத் தொற்ற வைப்போம். இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம். வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம். மத்தாப்பு வாழ்வை கித்தாய்ப்பாய் வாழ்வோம்.
இவ்வாறு கமல் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்







