---Advertisement---

ஏழாம் அறிவு…பாகுபலி…ரெண்டையும் பாத்த மாதிரியே தான் இருக்கு கல்கி…கமல் ரோல் என்னவா இருக்கும்?….

Published on: June 11, 2024
---Advertisement---

பிரபாஸ் “பாகுபலி” படத்திற்கு பிறகு இந்தியாவின் ஃபேவரைட் ஸ்டாராகி விட்டார். நம்பமுடியாத விஷயங்களை கூட தனது பிரம்மாண்ட காட்சியமைப்பால் படம் பார்த்தவர்களை சீட்டின் நுனிக்கே வரவழைத்திருந்தார் இயக்குனர் ராஜமெளலி. படத்தின் இரண்டாம் பாகம் கூட முதல் பாகத்தை போலவே தான் பிரம்மிக்க வைத்தது.

“பாகுபலி” போன்ற ஒரு எதிர்பார்ப்பை தான் தந்துள்ளது கல்கி 2898 AD படத்தின் டிரையலர். கற்காலத்தில் இருப்பது போன்ற காட்சியோடு தான் துவங்குகிறது டிரையலரின் முதல் நொடிகள். அப்படியே டைம் மிஷீனில் டிராவல் செய்து அதி நவீன உலகத்திற்கு வந்தடைகிறது.

KALKI
KALKI

பிரபாஸ் “பாகுபலி”யின் போட்டிருந்த அதே உடைகளில் வருகிறார். படத்தில் என்ன தான் இருக்கிறது என்ற ஆவலை தூண்டிவிட்டுள்ளார் இயக்குனர் நாக் அஷ்வின். அமிதாப் பச்சன் வேற இருக்கிறாராம் படத்தில், பேன் இந்தியா மூவி இது என்பதால் எல்லா மொழி ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தான் படம் வந்த பிறகு.

தீபிகா படுகோனே தான் ஹீரோயின். இளசுகளுக்கு நிச்சயம் ட்ரீட் இருக்கத்தான் போகிறது என்றும் நம்பலாம். நேற்று வெளியான டிரையலரை பார்க்கும் போது “ஏழாம் அறிவு” படத்தின் சாயல் ஆங்காங்கே தென்பருகிறது.

“பாகுபலி”யையும்நினைவில் வரவைக்கிறது சில விஷயங்கள். இதை எல்லாவற்றையும் விட கமல்ஹாசன் நடித்திருக்கிறார்.  தமிழ் ரசிகர்களின் முக்கியத்துவம் இந்த படத்திற்கு வழங்கப்பட இதுவுமே ஒரு முக்கிய காரணமாக சொல்ல்பபடுகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  என்னது இதெல்லாம் இவங்க வாய்ஸா?...சரிதான் இது பழைய சரிதாவேதான்!...

இவருக்கு நெகட்டிவ் ரோல்  தான் என சொல்லப்பட்டாலும். அவரின் நடிப்பு அதில் எப்படி இருக்கும் என யூகங்கள் கிளம்பிவிட்டது. எத்தனை படங்கள் ரீலீஸ் பட்டியலில் காத்திருந்தாலும் “கல்கி 2898 AD”க்கு எல்லாவற்றையும் விட அதிகமான எதிர்பார்ப்புகள் இருக்கத்தானே செய்யும் காரணம் அதில் நடித்திருக்கின்ற கலைஞர்களின் பெயர் பட்டியலை பார்க்கும் போது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial graphic illustrating the reported multi-starrer project with Suriya, Dhanush, and Mani Ratnam.

சூர்யா – தனுஷ் காம்போவில் பிரம்மாண்ட படம்: மணிரத்னம் இயக்கும் புதிய டுயல்-ஹீரோ மல்டிஸ்டாரர்!

Editorial visual announcing the theatrical re-release of Arjun's classic film Gentleman.

33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் அர்ஜுனின் ‘ஜென்டில்மேன்’: டிசம்பர் 11-ல் தியேட்டர் ரீ-ரிலீஸ்!

Editorial visual announcing the censor clearance and December release for Karathey Babu.

சென்சார் சிக்கல்கள் முடிவுக்கு வந்தது: ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ டிசம்பர் ரிலீஸுக்கு தயாரா?

Editorial visual announcing Dhanush's upcoming project lineup.

தனுஷின் மெகா லைன்-அப்: எச். வினோத் விலகியதும் சிறுத்தை சிவா கைக்கோர்த்த பின்னணி விவரங்கள்!

Editorial visual celebrating the birth of a baby girl to Tourist Family director Abishan Jeevinth and Akkila.

‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – அக்கிலா தம்பதியினருக்கு பெண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து!

Editorial visual featuring actress Radhika Apte's comments on colorism in South Indian cinema.

“தென்னிந்திய படங்களில் நிறவெறி அரசியல்?”: நடிகை ராதிகா ஆப்தே கிளப்பியப் புதிய சர்ச்சை!