---Advertisement---

இந்த மாசம் வில்லன்…அடுத்த மாசம் உத்தமன்…கமல்ஹாசன் உத்தமவில்லன் தானாமே?…

Published on: June 10, 2024
kamal
---Advertisement---

கமல்ஹாசன் தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவே, ஏன் உலக சினிமாவே கண்டு வியக்கும் திறமைகளை தனக்குள் கொண்டுள்ளவர் என்று தான் சொல்ல வேண்டும். கமல்ஹாசன் ஏற்று நடிக்காத கதாப்பாத்திரங்களே கிடையாது என்பது எல்லொருக்கும் தெரிந்த உண்மை தான்.

“பாகுபலி” புகழ் பிரபாஸ் நடித்துள்ள “கல்கி 2898 AD” படத்தின் டிரையலர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாக உள்ளது. பேன் இந்தியா மூவியான இதில் இந்திய திரை உலகின் முன்னனி நட்சத்திரங்கள் பலரும் நதித்துள்ளனர். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்துள்ள இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசயமைக்கிறார். நம்ம ஊர் கமல்ஹாசனும் இந்த படத்தில் நடித்துள்ளார்.

kalki
kalki

படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார் இவர் என்ற சொல்லப்படுகிறது. எந்த ரோலாக இருந்தால் என்ன அதனையெல்லாம் அசால்டாக டீல் பண்ணிவிடுவார் கமல். தமிழில் “தசாவதாரம்” எடுத்த கமலின் வில்லன் அவதாரத்தை பார்க்க பலரும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

“இந்தியன் – 2” படத்தில் வரவிருக்கும் தாத்தா கமலை ஒரு பக்கம் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, இந்த மாதம் 27ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது “கல்கி 2898 AD”.

கமலின் இந்த இரண்டு படங்களை பற்றிய பேச்சுக்கள் இப்போதே ரசிகர்கள் மத்தியில் கலை கட்டத்துவங்கிவிட்டது, போதாக்குறைக்கும் பல ஆண்டுகள் கழித்து கமல் – மணிரதனம் கூட்டணி வேற மற்றொரு பக்கம்  தமிழ் திரையை தாக்க தயாராகி வருகிறது ” தக்-லைஃப்” மூலம்.

“கல்கி 2898 AD”ல் இந்த மாதம் வில்லனாக வலம் வரும் கமல், அடுத்த மாதம் “இந்தியன்-2″வில் உத்தமனானக நடித்திருக்கிறார். மொத்தத்தில் உலக நாயகன் தான் உத்தமவில்லன் என்பதை மீண்டும் நிரூபிக்க போகிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.