---Advertisement---

வராத படத்தில் இவ்வளவு பெரிய ஹிட்டா

Published on: September 9, 2025
---Advertisement---

எண்பதுகளில் திரைப்பட கல்லூரி மாணவர்களை வைத்து அவர்களை இயக்குனர்களாக்கி ஊமை விழிகள்,  செந்தூரப்பூவே, என பல்வேறு விதமான பிரமாண்ட படங்களை தயாரித்தவர் ஆபாவாணன். இவரின் செந்தூரப்பூவே படத்திற்கெல்லாம் இன்றைக்கும் சில்லறையை சிதற விடும் 80ஸ் 90ஸ் கிட்ஸ்கள் உள்ளனர் அவ்வளவு அருமையா இருக்கும். இவர் தயாரிப்பில் வந்த இணைந்த கைகள் படமும் நல்லா இருக்கும்.

 

இவர் கங்கா யமுனா சரஸ்வதி என்ற சீரியல் தயாரிப்புக்கு பின் திரைப்படத்துறையில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார். நடுவில் இரண்டு பேர் என்ற படத்தை தயாரித்தார். இவரின் படம் என்றாலே பிரமாண்டம்தான் அதனால் காசு விசயத்தில் அதிகம் இவர் கவலைப்படமாட்டார்.

இரண்டு பேர் என்ற படத்தை ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அருகே பல லட்சம் ரூபாய் மதிப்பில் செட் எல்லாம் போடப்பட்டு படப்பிடிப்புக்கு எல்லாம் தயாரான நிலையில் படம் ட்ராப் ஆனது. படத்தை வி.ஐபி, எங்க தம்பி, சுந்தரபுருசன், பரதன் படங்களை இயக்கிய சபா கைலாஷ் இயக்க இருந்தார்.

படத்தில் ராம்கி, ரோஜா நடிக்க இருந்தனர். சுனில் வர்மா இசையில் வாரான் வாரான் பூச்சாண்டி என்ற பாடல் மட்டும் விஜய் டிவியில் வந்த கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் வந்த மதுரை மருது என்ற பொம்மை நாட்டிய கலைஞர் ஒருவரால் பிரபலம் அடைந்தது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.