---Advertisement---

ரஜினிய கலாய்ச்சி இருக்காரா ஷங்கர்?…எழு மணிக்கு வந்த தாத்தா ஏழரையா மாறுவாரா?…

Published on: June 25, 2024
rajini shankar
---Advertisement---

கமல் – ஷங்கர் கூட்டணியில் வெளியான “இந்தியன்” முதல் பாகம் மெஹா ஹிட் ஆனது. பல வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர் “இந்தியன்- 2″ன் மூலமாக. அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது.

இசை வெளியீடு கூட பிரம்மாண்டமாக செய்யப்பட்டது. படத்தின் பாடல் வெளியானதிலிருந்தே நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ‘தாத்தா வராரு, எழு மணிக்கு வராரு, எழரை கொடுக்க போறாரு’ பாட்டு தான். இந்த கால 2கே கிட்ஸுக்கு இந்த படம் பிடிக்குமா?ன்னு ரூம் போட்டு விவாதிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

indian 2
indian 2

இன்று “இந்தியன் – 2” படத்தின் டிரையலர் வெளியாகி உள்ளது. கமலின் கெட்-டப் ஃபர்ஸ்ட் பார்ட்டை விட பயங்கரமா இருக்கும் போல அந்த அளவு வைபாக வந்திருக்கிறது.

படிச்ச படிப்புக்கு ஏத்த வேலையில்லன்னு சொல்லி பஞ்சோட ஆரம்பிக்குது டிரையலர். அநியாயத்தை தட்டி கேக்க யாராவது இருக்காங்களான்னு கேட்க இருந்தாரு என சித்தார்த் சொன்னதும் கமல் என்ட்ரி.

நீங்க காந்தி வழியில, நான் நேதாஜி வழின்னு சொல்ற டயலாக்கை கேட்டாலே தரமான சம்பவம் ரெடியா இருக்குன்னு சொல்றது மாதிரி தான் இருக்கு.

எழு மணிக்கு வந்த “இந்தியன் – 2” தாத்தா,  லஞ்சம், ஊழலுக்கு எதிரா நிச்சயாமா  எழரையாத்தான் மாறப்போறாரு போல படத்துல.

சித்தார்த் பேசுற டயலாக்ல சிஸ்டம் சரியில்ல, சரிபண்ணனும்னு வாய் கிழிய பேசுறோம், ஆனா அத சரி பண்ண ஒரு துரும்ப கூட யாரும் கிள்ளி போடுறது இல்லேன்னு ஒரு பஞ்ச்.

ரஜினி ஒரு மேடையில பேசும் போது சிஸ்டம் சரியில்லேன்னு சொல்லியிருப்பாரு. ஒரு வேளை அதை ஞாபகம் வச்சித்தான் ஷங்கர் இந்த டயலாக்கை படத்தில வச்சாராருன்னு கேள்வி வருது “இந்தியன் – 2” டிரையலருக்கு பிறகு.

இன்னைக்கு காலையில தான் புளூ சட்டை மாறன் விஜய்க்கு ரஜினி ஏன் பிறந்த நாள் வாழ்த்து சொல்லலேன்னு கேட்டது வைரல் ஆனது.

சும்மா பேசினா மட்டும் போதாது அதுக்காக முயற்சி எடுக்கனும்னு சொல்றது ரஜினிய கலாய்க்கிற மாதிரி இருக்குதா?. இல்லே இந்த முயற்சியில விஜய் இறங்கிட்டாருன்னு மறைமுகமா சப்போர்ட் பண்ணிருக்காரா? ஏன்னா ரஜினி, விஜய் இவங்க ரெண்டு பேருமே ஷங்கர் பட ஹீரோஸ் தானே?.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!

பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் 'மிர்சாபூர் தி மூவி' படத்தின் சுவரொட்டி.

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டலான தொடக்கம்: முதல் நாளில் ரூ.17 கோடியைக் தாண்டி சாதனை படைத்த ‘மிர்சாபூர் தி மூவி’!

Conceptual graphic representing the reported collaboration between actor Suriya and director Mathimaran.

சூர்யாவின் அடுத்த மெகா கூட்டணி: ‘மண்டாடி’ இயக்குநர் மதிமாறனுடன் இணையவுள்ளாரா நடிகர் சூர்யா? – வைரலாகும் தகவல்!

Actress Wamiqa Gabbi emerging as Kollywood's new favorite leading lady.

கோலிவுட்டின் புதிய ஃபேவரைட் வாமிகா கபி: விஷால் மற்றும் சூர்யா படங்களுடன் ஹாட்ரிக் ஹிட் – முழு விவரம்!

Director Shiva Nirvana addressing recent cinematic collaboration rumors.

தனுஷ் இயக்கத்தில் புதிய படமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் శిவ நிர்வாண!