---Advertisement---

எதிர்பாரா வெற்றியை தமிழில் பெற்ற ஏழுமலை- அர்ஜூனுக்கு ஆச்சரியம் கொடுத்த படம்

Published on: September 18, 2025
---Advertisement---

அர்ஜூன் இயக்கும் படங்கள் பல தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கிறது. அர்ஜூன் இவ்வளவு படங்களை இயக்கியுள்ளாரா என ஆச்சரியம்தான் நமக்கு ஏற்படும். அவரின் சேவகன், ஜெய்ஹிந்த் படங்களின் வெற்றிக்கு பிறகு அவர் திரும்ப ஒரு வெற்றியை பெற சில காலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நடுவில் இவர் நடித்து இயக்கிய சில படங்கள் சரியாக போகவில்லை.

அந்த நேரத்தில் தெலுங்கில் நரசிம்ம நாயுடு என்ற படம் பாலையா என செல்லமாக அழைக்கப்படும் பாலகிருஷ்ணா நடிப்பில் 2001ல் பிரபல தெலுங்கு இயக்குனர் கோபால் இயக்கத்தில் வந்தது, அந்த படத்தை பார்த்து வியந்த அர்ஜூன், அந்த தெலுங்கு வாடை போகாமல் அப்படியே அந்த படத்தை தமிழில் இயக்கி இருந்தார்.

 

ஆக்சன் என்றால் ஆக்சன் மிக கடுமையான ஆக்சன் படம் இது. எல்லா ஆக்சன் காட்சிகளும் மாஸ் ஆக இருந்தன. சிம்ரன், கஜாலா கவர்ச்சிக்கு மும்தாஜ் என கலக்கலாக வந்திருந்தன.இப்படிலாம் 3 நாயகிகள் இல்லாம தெலுங்கு சினிமாக்காரர்கள் படம் இயக்க மாட்டார்கள்.

 

மணி சர்மா இசையில் லக்ஸ் பாப்பா லக்ஸ் பாப்பா, சில்லென்ற, எல்லா மலையிலும் நல்ல மலை இது  போன்ற பாடல்கள் நன்றாக இருந்தன. இந்த படம் நன்றாக இருந்ததால், திரும்பவும் சிம்ம பாலாயுடு என்ற பெயரில் திரும்ப இப்படம் டப் செய்யப்பட்டு இப்படம் வெளியிடப்பட்டது.