நாளை 4.11.2021 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ரஜினியின் அண்ணாத்தே, ஆர்யா, விசால் நடிப்பில் எனிமி படங்கள் ரிலீஸ் ஆகிறது. இரு ஹீரோ சப்ஜெக்ட். அவன் இவன் படத்துக்கு பிறகு விஷாலும், ஆர்யாவும் இணைந்து நடிக்கும் திரைப்படம் என்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணாத்தே படத்துக்கு மாற்று இந்த படம் என்பதாலும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாத்தே படத்துக்கு டிக்கெட் கிடைக்க பெறாதவர்கள் இந்த படத்தினை பார்க்க முயற்சி செய்வார்கள்.
படமும் அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.








