---Advertisement---

டான் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on: April 27, 2022
---Advertisement---

கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பலரது மனம் கவர்ந்த சிவகார்த்திகேயன். மெரினா படம் மூலம் தமிழில் அறிமுகமாகி இன்று பிடிக்க முடியாத உயரத்தில் உச்சத்தில் உள்ளார்.

சிவகார்த்திகேயன் தற்போது சில வருடங்களாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் சொந்த படங்களும் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது லைகா புரொடக்சன்சும், சிவகார்த்திகேயனும் இணைந்து டான் படத்தை தயாரித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை வெளியிடுகிறார்.

சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன்  ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளனர். டாக்டர் படத்துக்கு பிறகு இருவரும் இப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் காமெடி வெற்றிக்கூட்டணியாக சூரியும் இப்படத்தில் சிவகார்த்திகேயனோடு நடித்துள்ளார். இப்படத்தை  இயக்குனர் சிபி என்பவர் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார் இப்படம் வரும் மே 13ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.