---Advertisement---

நாத்திகர் என்றாலும் பக்திப்பாடலை தன் படங்களில் வைத்த மணிவண்ணன்

Published on: September 29, 2025
---Advertisement---

இயக்குனர் மணிவண்ணன் மிக சிறந்த நாத்திகர். கடவுள் மறுப்பு கொள்கை என சொல்லக்கூடிய  நாத்திக கொள்கை கொண்ட இயக்குனர் மணிவண்ணன், பெரும்பாலும் தான் இயக்கிய தன் படங்களில் அத்தகைய கொள்கைகளை உட்புகுத்தியதில்லை. ஒரு சில படங்களில் சொல்லி இருப்பார், அவை முட்டாள்தனமான கருத்துக்கள் என்ற அடிப்படையில் சில கருத்துக்களை ஜாலியாக சொல்லிவிட்டு விட்டிருப்பார், அதிகபட்சம் தனது படங்கள் குடும்ப படங்கள் , சஸ்பென்ஸ் ஹாரர் படங்களாகவே எடுத்திருப்பார், அதனால் நாத்திக ரீதியான கருத்துக்களை இவர் அதிகம் அந்த படங்களில் சொன்னதில்லை.

 

சினிமாவில் வந்த அழகிய பெருமாள் பாடல்களில் ஒன்றுதான் இளமைக்காலங்கள் படத்தில் இடம்பெற்ற ராகவனே ரமணா ரகுநாதா என்ற பாடல், கேட்டால்மனம் உருகும் அளவுக்கு இளையராஜா மெட்டு போட்டிருப்பார், பெரும்பான்மை குடும்பங்களில் இப்படி சாதாரணமாக பக்தியாக இருப்பர் என சாதாரணமாகவே காண்பித்திருப்பார், அப்போதான் படம் சிறக்கும், மக்களுக்கு எளிதில் கனெக்ட் ஆகும். இப்போது இருக்கும் நாத்திக கொள்கை கொண்ட  இயக்குனர்கள் தனது நாத்திக கொள்கைகளை திணிப்பதில் மட்டும்தான் உறுதியாக இருக்கிறார்கள்.

 

இவற்றில் மணிவண்ணன் மாறுபட்டவர், தீவிரமாக கடவுள் எதிர்ப்பு  கொள்கைகளை திணித்து மாட்டிக்கொள்ளாதவர், அதற்கு மாறாக பெரும்பான்மை குடும்பங்களில் வழிபாடு, வாழ்க்கை என இருப்பார்களோஇருப்பதை அப்படியே காண்பித்து தனது நாத்திக கொள்கைகளை காட்சிக்கு தேவையில்லாமல் வலிந்து திணிக்காதவர் மணிவண்ணன். இல்ல என்றால் அவரின் இளமைக்கால படத்து ராகவனே ரமணா ரகுநாதா பாடலை எல்லாம் கேட்டிருக்கவே முடியாது.