---Advertisement---

கேமரா முன்னாடி இல்ல… கேமராவுக்கு பின்னாடி மாஸ் காட்டும் விஜய் மகன்! “சிக்மா ஸ்டைல்” செட்டில் இருந்து ஜேசன் சஞ்சய் வெளியிட்ட கியூட் போஸ்ட்!

Published on: June 9, 2026
Director Jason Sanjay sharing working stills and behind-the-scenes memories with his crew from the sets of his debut movie Sigma Style under Lyca Productions.
---Advertisement---

தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தியாக வலம் வரும் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தற்பொழுது கோலிவுட்டில் ஒரு முரட்டுத்தனமான இயக்குநராகத் தனது புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். லண்டனில் பிலிம் மேக்கிங் படிப்பை முடித்துவிட்டு, பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தனது அறிமுகத் திரைப்படத்தை இயக்கி வரும் ஜேசன் சஞ்சய், தற்பொழுது தனது முதல் படமான “சிக்மா ஸ்டைல்” (#SigmaStyle) படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில அழகான மற்றும் நெகிழ்ச்சியான நினைவுகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

“சிக்மா ஸ்டைல் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட பல அழகான நினைவுகளில் சிலவற்றை தற்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த அன்புகள்!” என்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜேசன் சஞ்சய் பதிவிட்டுள்ளார். முற்றிலும் இளம் மற்றும் திறமையான நட்சத்திரங்களை வைத்து ஒரு விறுவிறுப்பான மாடர்ன் கதைக் களமாக இந்த படத்தை அவர் செதுக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தந்தை விஜய்யைப் போல கேமராவுக்கு முன்னால் வந்து நடிக்காமல், உலகத் தரம் வாய்ந்த ஒரு மெகா திரில்லர் கதையின் மூலம் கேமராவுக்குப் பின்னால் இருந்து இயக்குநராகத் தனது முத்திரையைப் பதிக்கத் தயாராகி வருகிறார் சஞ்சய். தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தளத்தில் இருந்து சஞ்சய் பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே பல மடங்கு அதிகரித்துள்ளது. சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல பரவி வரும் சஞ்சய்யின் இந்த லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் போஸ்ட், தற்பொழுது விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களால் பயங்கரமாக ஷேர் செய்யப்பட்டு இணையத்தில் மரண மாஸ் ட்ரெண்டாகி வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.