இயக்குனர் சேரனுக்கு இன்று பிறந்த நாள் . பாரதி கண்ணம்மா, பொற்காலம், பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராஃப், பொக்கிஷம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சேரன் இன்று இவரின் பிறந்த நாள் என்றாலும் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அது பெரிய அளவில் வரவில்லை.
இருப்பினும் இயக்குனர் பாரதிராஜா தனது வாழ்த்துக்களை சேரனுக்கு கூறியுள்ளார். அவர் கூறிய வாழ்த்து செய்தி.
மண்ணையும், மனிதர்களின் ஆழ் மனதையும், ஊடுருவிய கலைஞன்.. உறவுகளுக்குள் பாசத்தையும், உணர்வுகளையும், மழைபோல் கொட்டித் தீர்க்கும் பிரபஞ்சன் மகன் சேரனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என பாரதிராஜா கூறியுள்ளார்.









