---Advertisement---

இயக்குனர் பாலா மனைவியை விவகாரத்து செய்தார்

Published on: March 8, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பாலா.’சேது’, ‘நந்தா’, ‘பிதாமகன்’ தொடங்கி பல முக்கியமான படங்களை இயக்கியவர். இவர் இயக்கிய படங்கள் ரசிகர்களின் மனதில் என்றும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத மனிதர்களின் வாழ்க்கையைச் சுற்றியே அவரது கதைக்களம் அமைந்திருக்கிறது.

இயக்குநராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்திருக்கிறார். விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா உள்ளிட்ட நடிகர்களை மெருகேற்றியவர் இயக்குநர் பாலாதான்.
தற்போது மீண்டும் பாலா – சூர்யா கூட்டணியில் ஒரு படம் தயாராகி வருகிறது. ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களுக்குப் பிறகு பாலா – சூர்யா கூட்டணி இணைந்திருப்பதால் படத்துக்கு ஏற்கெனவே பல எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.
இந்நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் இயக்குநர் பாலாவும் அவர் மனைவி முத்துமலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள்.
கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (5.3.2022) இருவரும் சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்தார்கள்.
இயக்குனர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் கடந்த 2004ம் ஆண்டு மதுரையில் திருமணம் நடந்தது. 17 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இதையும் படிக்க தவறாதீர்கள்:  Ravi Mohan's Bold Reveal: "ஆண்கள்தான் மிகப்பெரிய பாதிக்கப்பட்டவர்கள்.." – விவாகரத்து சர்ச்சைக்கு ரவி மோகன் கொடுத்த அதிரடி பதிலடி!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Atmospheric South Indian dramatic thriller cinema visual representing the new promo of Sathyavan Savithiri starring Keerthy Suresh and Mysskin.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் இணையும் ‘சத்யவான் சாவித்திரி’! சாம் சி.எஸ் இசையில் வெளியான மிரட்டலான புதிய புரோமோ!

1990s Chennai cinema heritage visual representing S.A. Chandrasekhar's early prediction about Thalapathy Vijay during Sendhoorapandi. (Translation: Nostalgic 1990s Chennai cinema heritage visual representing S.A.

விஜய்யுடன் ‘சுந்தரா டிராவல்ஸ்’ வாய்ப்பை மறுத்த தயாரிப்பாளர்… சைக்கிளில் அழைத்துச் சென்று எஸ்.ஏ.சி சொன்ன அந்த வார்த்தை!

High-tension South Indian investigative thriller cinema visual representing Priyanka Mohan and Jai's upcoming film Red Eye.

பிரியங்கா மோகன் – ஜெய் இணையும் ‘ஏஜிஎஸ் 29’ படத்தின் தலைப்பு அறிவிப்பு! மிரட்டலான டைட்டில் என்ன தெரியுமா?

High-scale South Indian pan-India action cinema visual representing star Yash's reported talks with a Tamil filmmaker.

தமிழ் இயக்குநருடன் கைகோர்க்கும் பான் இந்தியா ஸ்டார் யஷ்! எந்த இயக்குநருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது தெரியுமா?

Moody South Indian cinema production office visual representing the reported scheduling fallout over Vishal and Durai Senthilkumar's upcoming film.

பவுண்ட் ஸ்கிரிப்ட் கேட்ட தயாரிப்பாளர், உடனே ஷூட்டிங் கேட்ட விஷால்… கைவிடப்பட்டதா துரை செந்தில்குமார் கூட்டணி?

Nostalgic South Indian campus and television studio editorial visual representing VJ Manimegalai's 2013 MBA college memories.

அதிகாலை 2 மணிக்கு எழுந்து படிப்பேன், இப்போ 2 மணிக்குதான் தூங்குறேன்… பழைய எம்பிஏ கல்லூரி நினைவுகளைப் பகிர்ந்த மணிமேகலை!