தனுஷ் தற்போது டி.43 என்ற படத்தில் நடித்து வருகிறார். துருவங்கள் 16 பட இயக்குனர் கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார். தனுஷின் 43வது படமான இந்த படத்துக்கு பெயர் வைக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று தனுஷின் 38வது பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்துக்கு பெயர் மாறன் என வைக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒரு பெயர் முன்பே சத்யராஜ் நடித்த ஒரு படத்துக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.







