---Advertisement---

தீபாவளி ஸ்பெஷலாக வரும் ஜகமே தந்திர பாடல்

Published on: November 9, 2020
---Advertisement---

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். பீட்சா படத்தின் மூலம் கவனம் பெற்ற இவர் அதற்கு அடுத்ததாக வந்த ஜிகர்தண்டா படம் மூலம் மிகவும் அதிக கவனம் பெற்றார்.

இதன் மூலம் சூப்பர்ஸ்டாரின் பேட்ட படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்றார் இவர். இவர் நடிகர் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் என்றொரு படத்தை இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் இப்படத்தின் புஜ்ஜி என்ற பாடலை தீபாவளிக்கு முன்னதாக 13ம் தேதி தீபாவளி பரிசாக வெளியிட இருக்கிறார்களாம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் வரும் இப்பாடல் ரசிகர்களுக்கு நல்லதொரு கொண்டாட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.