கடந்த 1986ம் ஆண்டு இதே நாள் நடிகர் கமல் நடித்த புன்னகை மன்னன் திரைப்படம் வெளியானது. முதலில் ரேகாவுடன் காதல் அது தோல்வியில் முடிய மலை உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள போன நிலையில் ரேகா மட்டும் உயிர் துறக்க கமல் மரக்கிளையில் மாட்டிக்கொள்ளும் படத்தின் ஆரம்ப கட்ட காட்சியை யாரும் மறக்க முடியாது.
பிறகு ரேவதியுடன் காதல் என்று வித்தியாசமான இப்படத்தினை இயக்கி இருந்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர்.
சிங்களத்து சின்னக்குயிலே, என்ன சத்தம் இந்த நேரம், மாமாவுக்கு குடுமா குடுமா என்று இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் என்றே சொல்லலாம்.
இப்பட பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின படமும் ஹிட் ஆனது. இப்படத்தில்தான் இளையராஜாவுடன் ஏ.ஆர் ரஹ்மான் இணைந்து பணியாற்றினார். கம்ப்யூட்டர் இசை இப்படத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது இன்றுடன் இப்படத்துக்கு 35 வயது, ஆம் இப்படம் வெளிவந்து 35 வருடங்கள் ஆகிறது 1 நவம்பர் 1986ம் ஆண்டு இப்படம் வெளியிடப்பட்டது.









