---Advertisement---

ஒரே நாள்ல லட்சாதிபதியான மைக் மோகன்…வெள்ளி விழா நாயகனை வீழ்த்திய கம்-பேக்?…

Published on: June 8, 2024
haraa
---Advertisement---

 

“சுட்டபழம்” படத்திற்கு பிறகு “ஹரா” படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் மோகன். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகும் அதே ஹீரோ கெத்தில் வந்திறங்கினார் மைக் மோகன். படத்திற்கு இதுவரை பெரிதாக பாஸிடிவ் விமர்சனம் கிடைக்கவில்லை. ‘கம்-பேக்’ படத்தில் இப்படி ஒரு கதையை நம்பி ஏமாந்துவிட்டாரே என்ற ஆதங்கம் மட்டும் தான் தெரிந்தது படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர்களிடம்.

மைக்கை மட்டுமே நம்பி பல ஆண்டுகள் சினிமாவில் வெற்றி நடை போட்ட மோகன், தந்தை – மகள் செண்டிமன்ட் கதை என்றதும் “விஸ்வாசம்” படம் போல வெற்றியை கொடுத்து விடும் என நம்பி விட்டார் என்றே தான் சொல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளிவிட்டார் மோகன்.

விஜய்ஸ்ரீஜியிடம் கதையில் அல்லது திரைக்கதையில் சில மாற்றங்களை செய்யவாவது சொல்லியிருக்கலாம். மோகனை நீண்ட நாட்கள் கழித்து திரையில் பார்த்த மகிழ்ச்சியை தவிர வேறு ஒன்றும் கிடையாது படத்தில் என்ற சலிப்பை வரவழைத்துவிட்டதாம் படம். இப்படி “ஹரா”விற்கு நெகட்டிவான கருத்துக்களை வாரிக்குவித்து வந்தாலும் படத்தின் கலெக்சன் கொஞ்சம் அசரத்தான் வைக்கிறதாம்.

hara samaniyan
hara samaniyan

ரிலீஸான முதல் நாளில் தமிழகத்தின் வசூல் மட்டும் 40 லட்சம் என சொல்லப்படுகிறது. அது போல வெளி மாநிலங்களின், ஓவர்சீஸ் வசூல் என பார்த்தால் எப்படியும் 60 லட்ச ரூபாயை தாண்டியிருப்பதாக பேசப்படுகிறது. மோகனை போலவே ரீ-என்ட்ரி கொடுத்த ராமராஜனின் “சாமானியன்” படத்தை விட மோகனின் “ஹரா” அதிகமாக வசூலித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விஜயுடன் “கோட்” படத்தில் நடித்து வருகிறார் மோகன். “ஹரா” வசூலித்துள்ளதை பார்க்கும் போது “கோட்” படத்தின் வசூல் மோகனால் கூட உயரும் என எதிர்பார்க்கபடுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.