பொதுவாக பி. வாசு தன் படங்கள் எல்லாம் கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் இருந்துதான் எடுப்பார். அந்த படங்களை ரீமேக் செய்துதான் எடுத்திருப்பார். சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இவர் இயக்கிய படங்கள் பல ரீமேக் படங்கள்தான்.
ஆனால் இந்த வால்டர் வெற்றிவேல் படம் மட்டும் சில படங்களின் ரெபரென்ஸ் காட்சிகளை வைத்து அவர் சொந்தமாக உருவாக்கிய படம்தான்.
சத்யராஜ் போலீஸ் ஆக நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற படங்கள் இருந்தாலும், சத்யராஜ்க்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது இப்படம்.
குற்றம் செய்தவன் மகனாகவே இருந்தாலும் அவன் குற்றவாளி என தங்கப்பதக்கம் பட தீமை தழுவிய திரைக்கதைதான் இப்படம்.
மிகப்பெரிய ஒரு சதிகார கும்பலின் முக்கிய அக்யூஸ்டே தனது தம்பி என தெரிந்தாலும் தைரியமாக அவர் மீது நடவடிக்கை எடுப்பது, தனக்கு கீழ் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய நாசர், போலீஸ் வேலையில் செய்த ஊழல் காரணமாக அதில் இருந்து விலகி அமைச்சராகி சத்யராஜை தனக்கு கீழ் அடிபணிய வைப்பது அதற்கு சத்யராஜ் காட்டும் ரியாக்சன் என அனைத்தும் அருமையாய் இருக்கும்.
விஜயக்குமாரின் நேர்மையான வேடம், கவுண்டமணியின் காமெடி, இளையராஜாவின் இசையில் வந்த அருமையான பாடல்கள் , சத்யராஜின் மாஸ் ஆக்சன், நாயகி சுகன்யாவின் நடிப்பு என இப்படம் கலக்கலாக அமைந்திருந்தது.

