தெலுங்கில் 1989ல் வந்த இந்துருடு சந்துருடு, தமிழில் இந்திரன் சந்திரன் ஆக வந்தது. ஒரு மேயர் செய்யும் தில்லாலங்கடி வேலைகளை மையமாக வைத்து வந்த இந்த படம் தெலுங்கில் பெரிய ஹிட், தமிழில் சுமார்தான்.
ஆனால் பாடல்கள் தமிழ் தெலுங்கிலும் தெறி ஹிட் ஆயின. தெலுங்கில் வந்த பாடல்கள் தான் தமிழிலும் அதே மெட்டில் இளையராஜா போட்டிருந்தார். தெலுங்கில் வெட்டுரி, ஸ்ரீவெண்ணலா சீதா ராம சாஸ்திரிகள் அழகான வரிகளை எழுதி பாடல்களை தெறிக்க விட்டிருந்தனர். தமிழில் இந்த பாடல்களை தமிழுக்கேற்ற சூழ்நிலைக்கு தமிழ்ப்படுத்தி கவிஞர் வாலி எழுதி இருந்தார்.
காதல் ராகமும் கனித்தமிழும், நூறு நூறு முத்தம், அடித்திடு கொட்டம், காலேஜ் டிகிரியும் கத்துக்கிட்ட டியூசனும் என் ஆல் டைம் பேவரிட் பாடல் மறக்க முடியாத பாடல். ஒரு காலத்தில் இந்த பாடலை டேப்ரெக்கார்டரில் போட்டு போட்டு தேய்த்திருக்கிறேன் அந்த அளவு செம வைபான பாடல் இந்த பாடல்.
35 வருடத்துக்கு மேல் ஆனாலும் இப்படத்தின் பாடல்கள் இன்னும் மறக்க முடியாத பாடல்கள் ஆகும்.

