எம் என் ராஜம் – தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள எம்.என்.ராஜம் சுத்தமான தமிழ் உச்சரிப்பும், தமிழ் வசனங்களை சரியான தோரணையுடன் பேசுவதில் கைத்தேர்ந்தவர்.
இவர் ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, அரங்கேற்றம், பாசமலர், நாடோடி மன்னன் என்ற எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். M. G. R, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்கள் முதல் இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை இவர் நடித்துள்ளார்.
இவருக்கு “தென்னிந்திய நடிகர் சங்கம்” ஒரு கௌரவ விருதை வழங்கயுள்ளது. இவரின் நீண்ட கால திரைப்பயணத்திற்காகவும் மற்றும் சினிமாவுக்காக இவர் அர்ப்பணித்த உழைப்பிற்காகவும், நடிகர் சங்கம் இவருக்கு “வாழ்நாள் சாதனை விருது” வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

செப்டம்பர்-21 ஆம் தேதி நடைபெறவுள்ள, நடிகர் சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில், அவருக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை எம்.என் ராஜன் கடந்த ஜூலை, தனது 90 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரை உலகில் உள்ள அனைத்து மூத்த நடிகர்களும், பல பிரமுகர்களும், ரசிகர்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்





