அடிப்படை சட்டத்தை வித்யாசமாய் சொன்ன படம்

அடிப்படை சட்டத்தை வித்யாசமாய் சொன்ன படம்

2002ம் ஆண்டு தமிழன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜய், பெப்ஸி விஜயனிடம் பேசும் ஒரு மாஸ் டயலாக் ஒன்று காலையில் சுத்தி வந்தது. வந்த உடன் இப்படம் ஞாபகம் வந்துவிட்டது.

விஜய் நடிப்பில் வந்த சிறந்த படங்களில் தமிழனும் ஒன்று. அன்றைய நேரத்தில் உலக அழகியாக புகழ்பெற்ற பிரியங்கா சோப்ராவும் இப்படத்தில் நாயகியாக முதன் முதலில் நடித்தார்.

ஆரம்ப காலங்களில் எஸ்.ஏ சந்திரசேகர்தான் இது போல படங்களை எடுத்தார். சட்டம், கோர்ட், வக்கீல், நீதிபதி என நீதி சம்பந்தமான படங்களையே எஸ்.ஏ சி எடுத்து வந்தாலும் முழுவதும் சட்டம் சம்பந்தமான படங்களை தன் மகனை வைத்து இயக்கவில்லை, ஆனால் மஜீத் என்ற இயக்குனர் இயக்கி விட்டார், இந்த படமுமே எஸ்.ஏ சியின் ஆதரவில் அவரின் திரைக்கதையோடு அவரின்மேற்பார்வையில் வந்த படம்தான். மறைந்த தயாரிப்பாளர் ஜிவி பிலிம்ஸ் ஜி வெங்கடேஸ்வரன் ஜி.வி பிலிம்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்திருந்தார்.

வழக்கமா கொ….. கொள்ளை என கமர்சியலாக வைத்து கோர்ட் காட்சிகள் வைக்காமல், மனிதன் அடிப்படை சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்திய படம் இது. முக்கியமாய் பஸ் கண்டக்டர் ஒரு ரூபாய் சில்லறை தரவில்லை என விஜய் அவரை கோர்ட்டுல நிறுத்தி அபராதம் செலுத்த வைக்கும் காட்சிகள் எல்லாம் சபாஷ்.

டி . இமான் இப்படத்தில்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார்