ஸ்வர்ணலதா 90களில் வந்த பல பாடல்களை பாடியவர். நீதிக்கு தண்டனை படத்தில் இடம்பெற்ற சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடலின் மூலம் அறிமுகமாகி, குரு சிஷ்யன் படத்தில் இடம்பெற்ற உத்தமபுத்திரி நானு பாடலின் மூலம் அனைவரும் அறிந்த பாடகியானார்.
இவர் மறைந்தாலும் இவரின் பாடல்கள் சாகா வரம் பெற்றவை. புன்னை வன பூங்குயிலே , என்னுள்ளே என்னுள்ளே என எண்ணற்ற பாடல்கள் இவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இவரின் பாடல்கள் அதிகம் மெலடி பாடல்கள் என்றே பலருக்கு தெரியும்.
ஆனால் 90களில் மெலடி பாடல்களை தவிர்த்து பல கிறக்கமான கவர்ச்சி பாடல்களை ஸ்வர்ணலதா தான் அதிகம் பாடியுள்ளார். நீங்கள் போய் ஸ்வர்ணலதா பாடிய பாடல்களை போய் ஆராய்ச்சி செய்து பார்த்தால் அது தெரியவரும்.
தேளு கடிச்சிடுச்சு தெய்வான, அண்ணாமல தீபம் என் மேலதான் கோபம் என இது போல நிறைய பாடல்களை குறிப்பிடலாம். 90களில் கவர்ச்சி காட்சிகள் நிறைந்த மெல்லிய ரொமாண்டிக் மெலடி பாடல்களையும் ஸ்வர்ணலதாதான் அதிகம் பாடியுள்ளார். அப்படி எல்லாம் இல்லனு இதில் தர்க்கம் செய்வதை தவிர்த்து அவரின் பாடல்கள் எல்லாவற்றின் லிஸ்ட்டை நீங்கள் போய் பார்த்தால் அறிந்துகொள்வீர்கள்.
கவர்ச்சியான பாடல்களுக்கு கிறக்கமான குரல் வேண்டும் அதற்கு ஸ்வர்ணலதா குரலே அருமையாய் பொருத்தமாய் இருந்திருக்கும் போல அதனால் க்ளாமர் பாடல்களுக்கு ஸ்வர்ணலதாவை அதிகம் பாட வைத்துள்ளனர் இசையமைப்பாளர்கள். 2010ல் ஸ்வர்ணலதா மறைந்து விட்டார். இருப்பினும் ஸ்வர்ணலதா பாடல்களை மறக்க முடியவில்லை. என்னுள்ளே என்னுள்ளே என்ற பாடலில் காலம் என்ற தேரே ஓடிடாமல் நில்லு என ஒரு வரியை ஸ்வர்ணலதா பாடியிருப்பார். காலம் எங்கே ஓடாமல் நிற்கிறது அது ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அது ஓடியதால்தான் ஸ்வர்ணலதா என்ற இனிய பாடகியை சீக்கிரமே இழந்து விட்டோம்.