சந்திரமுகிக்கு முன்பே அது போன்ற வேடத்தில் நடித்த ரஜினி

சந்திரமுகிக்கு முன்பே அது போன்ற வேடத்தில் நடித்த ரஜினி

இயக்குனர் பி வாசு முதலில் சந்தானபாரதியுடன் சேர்ந்து பாரதி வாசு என்ற பெயரில் தான் பன்னீர் புஷ்பங்கள் படத்தை இயக்கினார், அடுத்தடுத்து மெல்ல பேசுங்கள் என இவர்கள் இணைந்து இயக்கினர். இருவருமே இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள்.

 

 

ஒரு காலக்கட்டத்தில் சந்தானபாரதி, பி.வாசு தன்னுடைய தனிப்பட்ட திறன்களை வெளிப்படுத்த தனித்தனியாக படம் செய்ய துவங்கினர், அப்படி செய்தபோது பி. வாசு பல கன்னட படங்களைத்தான் தமிழுக்காக ரீமேக்கினார், மலையாள படங்களையும் ரீமேக்கினார். எந்த ஒரு படமாக இருந்தாலும் அதை பட்டி டிங்கரிங் பார்த்து அதை மெருகேற்றி விடுவார், எந்த படத்தில் இருந்தாவது சில ரெபரென்ஸ்களை பி. வாசு எடுத்திருப்பார். சந்திரமுகி படத்தின் ஒரிஜினல் மணிசித்ரதாழுவில் மோகன்லால் கதாபாத்திரம் டாக்டர் கதாபாத்திரம் தான் என்றாலும் தமிழுக்காக அதை ரஜினியை வைத்து பி. வாசு ரீமேக்கும்போது, ரஜினிகாந்த் நடித்து 70களின் இறுதியில் வெளியான திகில் பேய்படமான ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் டாக்டர் ரமேஷ் கதாபாத்திரத்தின் சாயலே தெரிந்தது. கிட்டத்தட்ட சந்திரமுகி போலவே ஆயிரம் ஜென்மங்கள் படமும் இருந்தது.