முரளி நடிப்பில் வின் செண்ட் செல்வா இயக்கத்தில் கடந்த 1999ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வாட்டாகுடி இரணியன். மன்னிக்கவும் வாட்டாகுடி இரணியன் என்றுதான் முதலில் பெயர் வைத்தார்கள். இது சம்பந்தமாக சிலர் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்வோம் அந்த பெயர் வைக்க கூடாது என சொன்னதால் இரணியன் என வைக்கப்பட்டது.

வாட்டாகுடி என்பது தஞ்சை மாவட்ட பகுதிகளில் உள்ள ஊர், அங்கு வாழ்ந்த ஒரு யாரும் அதிகம் அறிந்திராத சுதந்திர போராட்ட காலத்து வீரனை பற்றிய கதை இது என சொல்லப்பட்டது.
வீரன் இரணியனாக முரளி நடித்திருந்தார், ஆண்டை என சொல்லப்படும் ஆங்கிலேயர் காலத்து ஜமீனாக ரகுவரன் நடித்திருந்தார்.
வடிவேலுவின் காமெடி நன்றாக இருந்தது படத்திற்கு கொஞ்சம் கை கொடுத்தது, பாடல்களும் ஓக்கேதான் , தேவா இசையமைத்திருந்தார்.
ஆனால் படத்தின் ஓவர் சீரியஸ் திரைக்கதை சில தொய்வுகளும் படம் பெரிய வெற்றியை அடைய உதவவில்லை. ஆனால் நடிகர் ரகுவரனுக்கு தமிழ் நாடு அரசின் சிறந்த நடிகருக்கான சிறந்த வில்லன் விருது கிடைத்தது.
என் மாமன் மதுரை வீரன், சீ போயா நீ ரொம்ப மோசம் போன்ற பாடல்கள் வரவேற்பு பெற்றன.

