90களில் நடிப்பிலும் கவர்ச்சியிலும் கலக்கிய பானுப்ரியா

90களில் நடிப்பிலும் கவர்ச்சியிலும் கலக்கிய பானுப்ரியா

90களில் நாம் ரசித்த பானுப்ரியாவுக்கு தற்போது 58 வயது கிட்டத்தட்ட 60 வயதை நெருங்க போகிறார் என்பது ஒரு ஆச்சரிய அதிர்ச்சியான செய்தி, சூர்ய வம்சம் பட டயலாக் போல காலம்தான் எவ்வளவு வேகமா போகுதுன்னு பார்த்திங்களா.

 

ஆந்திராவில் ராஜமுந்திரியில் பிறந்த பானுப்ரியா, கடந்த 1983ல் வெளிவந்த மெல்ல பேசுங்கள் என்ற படத்தில் நடிகர் வசந்த் ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

 

அப்புறம் பாடும் பறவைகள் உள்ளிட்ட சிற்சில படங்களில் நடித்த பானுப்ரியா 90களுக்கு பிறகுதான் பெரிய அளவில் தமிழில் பிரபலமானார். பானுப்ரியா பானுப்ரியா என்றுதான் ஊர் உலகமே ஏங்கி கிடக்கும் அளவுக்கு சினிமா ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், பாக்யராஜ் என அந்த நாளைய ஹீரோக்கள் அனைவருடனும் இணைந்து நடித்தார்.

 

பாக்யராஜ் உடன் சுந்தரகாண்டம், ஆராரோ ஆரிரரோ படத்தில் நடித்து வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். குறிப்பாக இவர் பாடும் தேவனே தேவனே பாடல் ஜாலியா அருமையா இருக்கும்.

காமெடியாகவும் கவர்ச்சியாகவும் நடிக்க கூடிய இவர் சினிமாக்களில் கவர்ச்சியை தாராளமாக வாரி வழங்கி இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

 

குஷ்பு போன்றவர்கள் பீக்கில் இருந்த இந்த காலகட்டத்தில் பானுப்ரியாவும் பீக்கில் இருந்தார்.

 

காலங்கள் கடந்தாலும் பானுப்ரியா உச்சத்தில் இருந்த அந்த 80, 90களின் முக்கிய கோல்டன் டேஸ்களை மறக்க முடியாது.