இளையராஜா பாலச்சந்தர் இடையே புதுப்புது அர்த்தங்கள் படத்தின் போது பின்னணி இசையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.70 எண்பதுகளில் எம் எஸ் வி அவர்களுடன் பல படங்களில் கூட்டணி சேர்ந்த பாலச்சந்தர் சிந்து பைரவி படத்துக்கு பின்பு இளையராஜா புகழில் இருந்த காலத்தில் இளையராஜாவுடன் மட்டும் சிந்து பைரவி புன்னகை மன்னன் மனதில் உறுதி வேண்டும் புதுப்புது அர்த்தங்கள் என பல படங்கள் செய்தார்.
இந்த படத்தில் இளையராஜாவுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரை விட்டு பிரிந்து மரகத மணியுடன் அதிக படங்கள் செய்தார், தனது தயாரிப்பு படங்களில் தேவாவை பயன்படுத்தினார் குறிப்பாக அண்ணாமலை படம் பாலச்சந்தரின் தயாரிப்பில் மிகுந்த வெற்றி பெற்ற படமாகும்.
இதற்கு தேவா இசையமைத்தது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். வானமே எல்லை, அழகன் உட்பட பல படங்களில் மரகதமணியுடன் இவர் கூட்டணி சேர்ந்து அந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆகின. ஒரு கட்டத்தில் ஏ ஆர் ரகுமானை தனது தயாரிப்பில் வந்த ரோஜா படத்தில் பயன்படுத்தினாலும், ஏ ஆர் ரகுமானுடன் பாலச்சந்தர் இணைந்து பாடல்கள் ஹிட் ஆகிய ஒரே படம் டூயட் மட்டும்தான் அதன் பிறகு பார்த்தாலே பரவசம் என்ற படத்தில் தான் பாலச்சந்தர் ரகுமானுடன் இணைந்து இருக்கிறார். அதில் ஒண்ணும் பாடல் அவ்வளவு பெரிய ஹிட் இல்ல என சொல்லலாம்.
ரகுமானை அறிமுகப்படுத்திய பாலச்சந்தர் அவருடன் ஏன் அதிக படங்கள் செய்யவில்லை என தெரியவில்லை.

Posted incinema news
